துப்பாக்கி சத்தம் கேட்டும் ஓடாத சுற்றுலா பயணிகள்.. பலி அதிகரிக்க இதுதான் காரணம்! காஷ்மீரில் சோகம்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாத தாக்குதலில் 27 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டும் கூட பொதுமக்கள் அங்கிருந்து ஓடாதது தான் பலி எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி துப்பாக்கி சத்தம் கேட்டும் பொதுமக்கள் ஓடாமல் சாதாரணமாக நின்று குண்டு பாய்ந்து இறந்தது ஏன்? என்பது பற்றிய சோகமான தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்துக்குள் நேற்று நுழைந்த 4 பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு சுற்றுலா பயணிகளை கென்றனர். 27 பேர் பலியாகினர். தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி மொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து அதிர வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தாக்குதல் நடந்த இடம் புல் மேடாகும். பசுமையாக இங்கு புற்கள் வளர்ந்துள்ளன. குதிரை சவாரியும் நடக்கிறது. இங்கு வாகனங்கள் செல்லாது. சுற்றுலா பயணிகள் நடந்து தான் செல்ல வேண்டும். கண்களுக்கு குளிர்ச்சியான இந்த புல்மேட்டுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்து மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு வருகிறார்கள். இதனால் தான் பயங்கரவாதிகள் இந்த இடத்தை டார்கெட் செய்துள்ளனர்.
நேற்றைய தாக்குதலிலும் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பலியாகி உள்ளனர். நேற்றைய சம்பவத்தின்போது 4 பயங்கரவாதிகள் சுற்றுலா தலத்துக்குள் நுழைந்தவர்கள். அவர்கள் ராணுவ வீரர்கள் போல் உடையணிந்து கையில் துப்பக்கி வைத்தனர். அமெரிக்க தயாரிப்பான எம்4 கார்பின் அசால்ட் ரைபிள், மற்றும் ஏகே 47 எஸ் உள்ளிட்ட துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.
ராணுவ உடை அணிந்திருந்ததால் அவர்கள் மீது சுற்றுலா பயணிகளுக்கு சந்தேகம் வரவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஒவ்வொருவரையும் சுட்டு தள்ளியுள்ளனர். துப்பாக்கியால் சுடும்போது சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் கேட்டதும் பொதுமக்கள் ஓட்டம் பிடித்து இருந்தால் உயிர் பலி என்பது அதிகரித்து இருக்காது. ஆனால் பல சுற்றுலா பயணிகளும் ஓடவில்லை. தொடர்ந்து சுற்றுலா தலங்களிலேயே இருந்தனர்.
இதற்கும் முக்கிய காரணம் உள்ளது. அதாவது ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை ஆங்காங்கே ராணுவ முகாம், ராணுவ பயிற்சி முகாம்கள் உள்ளன. அங்கு வழக்கம்போல் துப்பாக்கிச்சூடும் பயிற்சி நடப்பது வழக்கம். இதனால் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபோதும் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வதாக நினைத்து சுற்றுலா பயணிகள் ஓடாமல் இருந்துள்ளனர். இது பலி எண்ணிக்கை அதிகரிக்க இன்னொரு காரணம். இதனை பயங்கரவாத தாக்குதலில் குடும்ப உறுப்பினர்களை இழந்த பலர் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளனர் என்பது சோகமாக விஷயமாகும்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications