55 இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான்- 8 படகுகளையும் பறித்தது!
கட்ச்: எல்லையை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 55 பேரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. அவர்களது 8 படகுகளையும் பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது.
அரபிக்கடலில் இந்திய-பாகிஸ்தான் எல்லை சரியாக வரையறுக்கப்படவில்லை. இதனால் இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதும் பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய எல்லைக்குள் வந்து மீன்பிடிப்பதும் தொடர்கதை ஆகி வருகிறது.
இதனால் அவர்கள்மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் எல்லை தாண்டிச்சென்று மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மீனவர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

கடந்த 27-ந் தேதியும் பாகிஸ்தான் கடற்படை, பாகிஸ்தானில் எல்லை தாண்டிச்சென்று மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 27 பேரை கைது செய்தது. ஒருவாரத்திற்குள் 2வது முறையாக தற்போது 55 மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் பாகிஸ்தானை சேர்ந்த 37 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் இந்தியா விடுதலை செய்தது. இதேபோன்று பாகிஸ்தானும் 151 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது. அவர்களின் 57 மீன்பிடி படகுகளையும் விடுவித்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications