8வது நாள்.. பாகிஸ்தான் ஆணவம் குறையவில்லை.. எல்லையில் மீண்டும் அத்துமீறல்.. சுதாரிக்கும் இந்தியா
ஸ்ரீநகர்: தொடர்ந்து 8வது நாளாக நேற்று ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எந்தவித தூண்டுதலும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளுக்கு எதிரே உள்ள நிலைகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. 740 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் உடனுக்குத்தான் பதிலளித்தது.

ஏப்ரல் 24 ஆம் தேதி இரவு முதல் இந்த துப்பாக்கி சூடு நடந்து வருகிறது. சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் துருப்புக்கள் தூண்டுதலின்றி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றன.
எல்லையில் மோதல்
இதன் மூலம் 8வது நாளாக பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தி உள்ளது. வியாழக்கிழமை இரவு முழுவதும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எந்தவித தூண்டுதலும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளுக்கு எதிரே உள்ள நிலைகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. 740 கிலோமீட்டர் நீளமுள்ள நடைமுறை எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் பதிலளித்தது.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 24 ஆம் தேதி இரவு முதல், சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் துருப்புக்கள் தூண்டுதலின்றி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றன.
செவ்வாய்க்கிழமை, இஸ்லாமாபாத் ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் உள்ள பர்க்வால் பகுதிக்கு துப்பாக்கிச் சூட்டை விரிவுபடுத்தியது.
அதே நாளில், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் (DGMOக்கள்) ஹாட்லைன் மூலம் பேசினர். தூண்டுதலற்ற துப்பாக்கிச் சூடுகளுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, DGMO பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்தவர்கள் PTI இடம் தெரிவித்தனர்.
மோடி தந்த பவர்
தீவிரவாதத்திற்கு அழிவு தரும் அடியை கொடுக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. இதற்கான முழு அதிகாரம் உங்களுக்கு தருகிறோம். இந்திய ஆயுதப் படைகளின் திறன்களில் எனக்கு முழு நம்பிக்கையை உள்ளது,. உங்களுக்கு ராணுவ தாக்குதல் திட்டமிடலில் முழு அதிகாரம், சுதந்திரத்தை தருகிறோம்., என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் படைகளை தயாராக இருக்க சொல்லி இருக்கிறேன். இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம்.
இது போன்ற சூழ்நிலையில் சில மூலோபாய முடிவுகளை எடுக்க வேண்டும், எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா நம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டு அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதை பற்றிய கூடுதல் விவரங்களை சொல்ல முடியாது. ஆனால் இந்திய ராணுவத்தின் தாக்குதல் ஊடுருவல் உடனடியாக நடக்க வாய்ப்புகள் உள்ளன, என்று பாக். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் பேசி உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications