Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாங்குனது பத்தாது போல.. ஜம்மு காஷ்மீரை நோட்டமிட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள்? ஹை அலர்ட்டில் ராணுவம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் சந்தேகத்துக்கிடமாக பாகிஸ்தான் ட்ரோன்கள் பறந்ததாக வெளியாகியுள்ள தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் ட்ரோன் பறந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ராணுவமும் பிற பாதுகாப்பு அமைப்புகளும் உட்சபட்ச எச்சரிக்கையுடன் இருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இந்தியா மீது தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறி ராணுவ மூலமும், தனது தீவிரவாத இயக்கங்கள் மூலமும் தாக்குதல் நடத்திய வருகிறது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டதோடு தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன. இதை அடுத்து பாகிஸ்தான் பணிந்த நிலையில், தற்போது மீண்டும் வாலை ஆட்ட ஆரம்பித்திருக்கிறது.

india Pakistan Drones Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் சந்தேகத்துக்கிடமாக பாகிஸ்தான் ட்ரோன்கள் பறந்ததாக வெளியாகியுள்ள தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜௌரி மாவட்டத்தின் நவ்ஷேரா (Nowshera) செக்டரில், கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று பறந்ததை இந்திய ராணுவம் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் உடனடியாக நடுத்தர மற்றும் இலகு மெஷின் கன் மூலம் ட்ரோன் மீது சுட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ட்ரோன் அலர்ட்

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6.35 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீரின் சம்பா, ரஜௌரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள பல முன்நிலை பகுதிகளிலும் சந்தேகத்துக்கிடமான ட்ரோன் இயக்கங்கள் பதிவாகியுள்ளன. இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த ட்ரோன்கள் அனைத்தும் பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்து, சில நிமிடங்கள் இந்திய வான்பரப்பில் பறந்த பிறகு மீண்டும் திரும்பிச் சென்றது" என கூறியுள்ளனர்.

பாகிஸ்தான் ட்ரோன் ஊடுருவல்

இந்த தொடர்ச்சியான ட்ரோன் ஊடுருவல் முயற்சிகள், பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறிப்பாக ரஜௌரி மாவட்டத்தின் தேரியத் (Teryath) பகுதியில் உள்ள கப்பர் (Khabbar) கிராமத்திலும், மின்னும் ஒளியுடன் ஒரு ட்ரோன் போன்ற பொருள் பறந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அது கலகோட் (Kalakote) பகுதியில் உள்ள தர்ம்சால் கிராம திசையிலிருந்து வந்து, பின்னர் பரக் (Bharakh) நோக்கி நகர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், சம்பா மாவட்டத்தின் ராம்கர் செக்டரில் உள்ள சக் பாப்ரல் (Chak Babral) கிராமத்தின் மேல், சுமார் 7.15 மணியளவில் ஒரு ட்ரோன் போன்ற பொருள் சில நிமிடங்கள் வானில் பறந்ததாக கூறப்படுகிறது.

இந்திய ராணுவம்

பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோட் (Mankote) செக்டரிலும், டெயின் (Tain) திசையிலிருந்து டோபா (Topa) நோக்கி நகர்ந்த ஒரு ட்ரோன் போன்ற பொருள் 6.25 மணியளவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அனைத்து சம்பவங்களும் ஒரே மாலை நேரத்தில் நடந்ததால், திட்டமிட்ட முறையில் எல்லை பகுதிகளை கண்காணிக்கும் முயற்சி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ட்ரோன் இயக்கங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படைகள் தரையில் தீவிர தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளன.

ஹை அலர்ட்

ஆயுதங்கள் அல்லது வெடிப்பொருட்கள் வீசப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய, கிராமப்புறங்கள் மற்றும் எல்லையோர பகுதிகள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சம்பா மாவட்டத்தின் காக்வால் அருகே உள்ள பாலூரா (Paloora) கிராமத்தில், பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படும் ட்ரோன் மூலம் வீசப்பட்ட ஆயுத பை பாதுகாப்புப் படைகளால் கைப்பற்றப்பட்டது.

பாகிஸ்தான் அத்துமீறல்

அந்த ஆயுத பையில், இரண்டு துப்பாக்கிகள், மூன்று மெகசீன்கள், 16 ரவைகள் மற்றும் ஒரு கைக்குண்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொடர்ச்சியான ட்ரோன் ஊடுருவல் முயற்சிகள், எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படும் நிலையில், இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. அடுத்த கட்டமாக, இந்த ட்ரோன்கள் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன, யார் பின்னணியில் உள்ளனர் என்பதைக் கண்டறிய விசாரணை விரைவுபடுத்தப்படும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+