Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனல் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: காஷ்மீரின் பஹல்காமில் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகி உள்ளனர். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனலை முடக்கி மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியாகினர்.

spy pakistan rajastan

இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்க நம் படைகள் தயாராகி வருகிறது. விரைவில் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியை நம் படை வீரர்கள் கொடுக்க உள்ளனர். எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அரபிக்கடலில் போர் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் விமானப்படை விமானங்களும் அவசர கால பயிற்சியை தொடங்கி உள்ளன.

இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தானுக்கு எதிரான பிற நடவடிக்கைகளிலும் நம் நாடு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி சிந்து நதி நீரை நிறுத்துதல், பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுதல், பாகிஸ்தான் தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்தல், அட்டாரி - வாகா எல்லை மூடல், வர்த்தக உறவை துண்டித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாகவும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் உள்ளது.

இதன் அடுத்தக்கட்டமாக பாகிஸ்தான் பிரபலங்களில் யூடியூப் சேனல்களை முடக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அதன்படி இன்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனல் நம் நாட்டில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது அவரது யூடியூப் பக்கத்தை கிளிக் செய்து பார்த்தால், ‛‛தேச பாதுகாப்பு கருதி அரசு உத்தரவின் அடிப்படையில் இந்த சேனலில் உள்ள கண்டென்ட் என்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது''என்று வருகிறது.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களை முதற்கட்டமாக மத்திய அரசு முடக்கியது. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் என்பது அதிகரித்து வரும் நிலையில் தவறான தகவல்களை அழித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த 16 யூடியூப் சேனல்கள் முடக்கம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூல் சேனல் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி Dawn News, Irshad Bhatti, SAMAA TV, ARY NEWS, BOL NEWS, Raftar, The Pakistan Reference, Geo News, Samaa Sports, GNN, Uzair Cricket, Umar Cheema Exclusive, Asma Shirazi, Muneeb Farooq, SUNO News, Razi Naama உள்ளிட்ட யூடியூப் சேனல்கள் முடக்கம் செய்யப்பட்டன. அதாவது நம் நாட்டுக்கு எதிராகவும், மக்களை தூண்டி விடும் வகையிலான கன்டென்ட்டுகளை இந்த சேனல்களில் பதிவேற்றம் செய்வதன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+