பல் உடைபட்ட பாகிஸ்தான்..இனி எழுந்திருக்கவே முடியாது! அடிச்ச அடி அப்படி..நெஞ்சை நிமிர்த்தும் இந்தியா!
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியாவின் பலம் மிகுந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டதாகவும், மேலும், பாகிஸ்தான் இராணுவம் பொதுமக்களை குறிவைத்து தாக்கியதாகவும், இதன் மூலம் உலக அளவில், பாகிஸ்தான் தனது நம்பிக்கையையும் நற்பெயரையும் இழந்துவிட்டதாக இந்திய இராணுவம் குற்றஞ் சாட்டியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 25 இந்தியர்கள் உட்பட 26 பேர் பலியாகினர். தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தொடர்புடைய தீவிரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தொடர்ந்து இரு நாடுகள் இடையே போர் ஏற்படும் சூழல் இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்கள் ஆபரேஷன் சிந்தூட் நடவடிக்கை மூலம் தாக்கி அழிக்கப்பட்டன. குறிப்பாக ஜெய்ஸ் இ முகமத், லஸ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. மேலும், இந்தியா தேடிவரும் பயங்கரவாதி என மசூத் அசாரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட தீவிரவாதிகளும் அழித்தொழிக்கப்பட்டனர்.
இதை அடுத்து இந்தியாவின் நடவடிக்கை போர் என கூறிய பாகிஸ்தான் இந்திய எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இருந்த போதும் இந்தியாவின் எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்தியா அவற்றை தாக்கி அழித்தது. மேலும் விமானப்படை, கப்பற்படை, தரைப்படை ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தின. இதில் இஸ்லாமாபாத் கராச்சி ஆகிய பகுதிகள் தாக்கப்பட்டதோடு f 16 விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த விமானப் படைத் தளங்களும் அழிக்கப்பட்டன.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியாவின் பலம் மிகுந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டதாகவும், மேலும், பாகிஸ்தான் இராணுவம் பொதுமக்களை குறிவைத்து தாக்கியதாக பூஞ்ச் பிரிகேட் கமாண்டராக இருக்கும் பிரிகேடியர் முடித் மஹாஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "பாகிஸ்தான் இராணுவம் தனது தாக்குதலின் போது பொதுமக்களை குறிவைத்தது. இது அவர்களின் மனிதநேயமற்ற செயலை வெளிப்படுத்துகிறது. அவர்கள் மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பகுதிகளையும் தாக்கினர்
ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய இராணுவம் கையாண்ட நடவடிக்கைகள் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெற்றன. பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலையும் நடத்தி இருந்தது. ஆனால், இந்தியா தனது மீது வந்த இந்த தாக்குதல்களை அணைத்தையும் முறியடுத்தது. அதே நேரத்தில், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கையில் இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை விமான தாக்குதலின் மூலம் அழித்தது. மேலும் மே 7ஆம் தேதி இரவு, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் சுற்றுலாப் பயணிகளை கொன்றது.
அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்த தாக்குதலில் முக்கியமான 9 இலக்குகளில் 6 இலக்குகள் பூஞ்ச், ராஜோரி மற்றும் அக்னூர் பகுதிகளை எதிர்நோக்கியிருந்ததாகவும், அவை வெற்றிகரமாக அழிக்கப்பட்டது.
இந்திய இராணுவம் மிகக் கூர்மையான திட்டத்துடன், வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் பாகிஸ்தான் பல இராணுவ வீரர்களை இழந்துள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது குறிவைத்து தாக்கியதையடுத்து தான், இந்தியா நடவடிக்கையில் ஈடுபட்டது" என்றார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications