பாட்னா குண்டுவெடிப்பு: 5வது குற்றவாளி டெல்லி ஏர்போர்ட்டில் கைது

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் கூட்டம் நடந்த காந்தி மைதானத்தில் 7 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 6 பேர் பலியாகினர், 82 பேர் காயம் அடைந்தனர்.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் தலா 3 குண்டுகள் வீதம் 18 குண்டுகளை வைத்திருந்தனர். அதில் 7 குண்டுகள் வெடித்தன. மீதமுள்ள குண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் அகற்றினர். இந்த சம்பவம் நடந்த உடன் போலீசார் தவ்சீம், இம்தியாஸ் அன்சாரி ஆகிய 2 பேரை பாட்னாவில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இதையடுத்து பீகாரின் கிழக்கு சாம்பரன் மவாட்டத்தில் உள்ள அலாவ்லி கிராமத்தில் வைத்து அர்ஷத் அகமது என்பவனை உள்ளூர் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று உஜ்ஜைர் அகமது என்ற குற்றவாளி ராஞ்சியில் கைது செய்யப்பட்டான். அவனுடைய உறவினரும் மற்றொரு குற்றவாளியுமான முகமது அப்சல் தனது மனைவியை பார்க்க இன்று டெல்லி விமான நிலையத்திற்கு வந்தான். அவ்வாறு வந்த இடத்தில் அப்சல் கைது செய்யப்பட்டான்.
அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications