காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சித்தலைவர் சுட்டுக்கொலை... தீவிரவாதிகள் அட்டூழியம்!
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சித்தலைவர் அப்துல் கானி தாரை ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
காஷ்மீரின் தெற்கே புல்வாமா பகுதியின் அருகில் உள்ள பிங்க்லான் என்ற இடத்தில் இக்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரின் பெயர் அப்துல் கானி தார்.

ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அவரை ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் வழிமறித்து துப்பாக்கியால் சாராமரியாகச் சுட்டனர். இதில் மார்பில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் படுகாயம் அடைந்த கானி தார் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications