திடீரென குலுங்கிய ஜம்மு காஷ்மீர்.. வீதிக்கு ஓடிய பொதுமக்கள்! நிலநடுக்கத்தால் பீதி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிக்டர் அளவில் 4.1 என்கிற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் இன்று மதியம் 12.26 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்திருக்கிறது. நிலநடுக்கம் லேசாக பதிவாகியிருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

டெக்டானிக் பிளேட்டுகளின் நகர்வுகளே நிலநடுக்கம் ஏற்படுவதற்கு பொதுவான காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது பூமியின் மீது நிலத்தட்டுக்கள் இருக்கின்றன. இதைத்தான் விஞ்ஞானிகள் டெக்டானிக் பிளேட் என்று கூறுகின்றனர். ஒரு காலத்தில் இவை அனைத்தும் இணைந்து ஒரே தட்டாக பெரிய நிலப்பரப்பாக இருந்தது. ஆனால், கால மாற்றத்தில் இது உடைந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கமாக சென்றுவிட்டது. இப்படித்தான் ஏழு பெரும் கண்டங்கள் உருவாகின.
இதில் சேராத நிலப்பரப்புகள் தீவுகளாக மாறின. சில நேரங்களில் இந்த நிலப்பரப்புகள் மெல்ல நகர்ந்து பெரிய நிலப்பரப்பின் மீது மோதுவதுண்டு. தற்போது இருக்கும் இமயமலையும் இப்படித்தான் உருவாகியிருக்கிறது. இந்திய நிலப்பரப்பு ஆசிய கண்டத்துடன் மோதியதால் இமயமலை உருவாகியுள்ளது. இந்த மோதல் இன்றும் நீடித்து வருகிறது. எனவே ஆண்டுக்கு சில இன்ச் அளவுக்கு இமய மலையின் உயரம் கூடிக்கொண்டே வருகிறது.
அதேநேரம் லேசான நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன. இப்படித்தான் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications