மாணவர்களின் மதிய உணவிற்கும் ஆதார் கார்டுக்கும் என்ன சம்பந்தம்… கேரள முதல்வர் பினராய் விஜயன் கேள்வி
மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கு வெளிப்படைத்தன்மை வேண்டுமே ஒழிய எதற்காக ஆதார் கார்டு வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவனந்தபுரம்: பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சாப்பிடும் மாணவர்கள் ஆதார் கார்டு அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவச மதிய உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 10 கோடி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
மதிய உணவு உண்ணும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணை பள்ளியில் கட்டாயம் அளிக்க வேண்டும் என்றும் ஆதார் எண் இல்லாத மாணவர்கள் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாஜகவிற்கு கண்டனம்
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எதிர்ப்பு கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

பேஸ்புக் பதிவு
மத்திய அரசின் இந்த முடிவு அபத்தமாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது என்றும் இதற்கான பின்னனி என்ன என்பதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது என்றும் பினராய் விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மதிய உணவிற்கு தடை
மத்திய அரசின் இந்த நடவடிக்கை குழந்தைகளின் மதிய உணவு உட்கொள்வதில் தடைகளை ஏற்படுத்தும் என்றும் கேரள முதல்வ பினராய் விஜயன் கூறியுள்ளார். மேலும், மதிய உணவு அளிப்பதில் வெளிப்படைத்தன்மை அவசியமே தவிர ஆதார் கார்டு எதற்கு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வயிற்றில் அடிப்பு
பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, ஏழைகள், ஏழைக் குழந்தைகளின் வயிற்றில் அடிப்பதையே அடிப்படை வேலையாக கொண்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடிக்குமானால் மோடி அரசு அடுத்த முறை ஆட்சி பிடிக்க முடியாது என்றும் கேரள மக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications