போர் விமானத்தில் பறக்கும் திட்டம் மோடியிடம் இல்லை: பாதுகாப்புத்துறை மறுப்பு
பெங்களூரு: பெங்களூரில் நடைபெறவுள்ள ஏரோ இந்தியா ஷோவின்போது போர் விமானத்தில் பிரதமர் மோடி பறக்கவுள்ளதாக வெளியான செய்திகளை பாதுகாப்புத்துறை மறுத்துள்ளது.
அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று பாதுகாப்புத்துறை மறுத்துள்ளது. ஏரோ இந்தியா 2015 ஷோவின்போது ரஃபேல் ரக போர் விமானத்தில் மோடி பறக்கவுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து விளக்கியுள்ள மத்திய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் சிதன்ஷு கர் கூறுகையில், பிரதமர் மோடி ரஃபேல் ரக விமானத்தில் பறக்கவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையற்றது.

பிரதமர் மோடி எந்த வகையான போர் விமானத்திலும் பறக்கும் திட்டத்தில் இல்லை. இந்த செய்தி தவறானது, அடிப்படை இல்லாதது என்று அவர் விளக்கியுள்ளார்.
ஏரோ இந்தியா ஷோவுக்கும், மத்திய பாதுகாப்புத்துறை மேற்கொள்ளும் விமான கொள்முதலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
பல்வேறு நாடுகளின் விமானங்கள் ஏரோ இந்தியாவில் காட்சிப்படுத்தப்படுகின்றன. பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளர்கள் தங்களது படைப்புகளை இங்கு காட்சிக்கு வைக்கிறார்கள்.இத்துறையில் ஏற்பட்டுள்ள நவீனங்களை அறிய இது ஒரு வாய்ப்பு என்றார் அவர்.
போர் விமானத்தில் மோடி பறக்கப் போவதாக வெளியான செய்தியைப் பார்த்து பிரதமர் அலுவலகம் அப்செட் ஆகி விட்டதாம். இது மிகவும் தவறான செய்தி என்றும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த செய்தி தொடர்பா்க சனிக்கிழமை முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேலும் சுகோய் விமானம் இருக்க ஏன் ரஃபேல் விமானத்தை மோடி தேர்ந்தெடுத்தார் என்றும் விவாதங்கள் கிளம்பின.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications