பீகாரில் மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார்... தொலைபேசியில் மோடி, ட்விட்டரில் அமித்ஷா வாழ்த்து
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் முதல்வராகியுள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் ட்விட்டரில் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
பீகாரில் எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பணியாற்றியது பா.ஜ.க. இதற்காக ஒரு மாத காலத்துக்கும் மேலாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷா அங்கேயே முகாமிட்டு பணியாற்றினார்.

பிரதமர் மோடியும் பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு மிகக் கடுமையாக பிரசாரம் செய்தார். ஆனால் எதுவும் கைகொடுக்காமல் கடந்த தேர்தலை விட படுதோல்வியையே சந்தித்துள்ளது பா.ஜ.க. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகியுள்ளார் நிதிஷ்குமார்.
Had a telephone conversation with Shri @nitishkumar & congratulated him on the victory.
— Narendra Modi (@narendramodi) November 8, 2015 இந்நிலையில் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் நிதிஷ்குமாருக்கு பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications