ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில்கள்.. சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.. எந்தெந்த வழித்தடங்களில்?
போபால்: பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் வைத்து 5 ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
ரயில் பயணிகளின் பயண வசதியை மேலும் அதிகரிப்பதில் இந்திய ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த ரயிலில் பயணிகளுக்கு விமானத்திற்கு நிகரான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, சுழலும் இருக்கைகள், முழுவதும் ஏசி வசதி, விசாலமான ஜன்னல்கள் என பயணிகள் சொகுசாக பயணிக்க பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக புதுடெல்லி - வாரணாசி இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. தற்போது சென்னை - மைசூரு, சென்னை - கோவை என மொத்தம் 18 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் வைத்து 5 ரயில்களின் சேவைகளை தொடங்கிவைத்தார்.
பல்வேறு மாநிலங்களில் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக கோவா - மும்பை, பாட்னா - ராஞ்சி, போபால் - இந்தூர், போபால் - ஜபல்பூர், பெங்களூர் - ஹூப்ளி உள்ளிட்ட 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். 2 ரயில்கள் மத்தியப் பிரதேசத்திலும், ஒன்று கர்நாடகாவிலும், ஒன்று பீகாரிலும், மும்பை-கோவா வழித்தடத்திலும் ரயில்கள் இன்று முதல் இயங்குகிறது.
இந்த 5 ரயில்கள் இயக்கப்படுவதன் மூலம் இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை 23 ஆக அதிகரிக்கிறது. கர்நாடகாவின் 2 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாக பெங்களூர் - ஹுப்ளி - தார்வாட் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. ஹுப்ளி - தார்வாட் இடையே சுமார் 490 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி 13 நிமிடங்களில் பயணிக்கும். இந்த ரயில் பெங்களூரில் இருந்து காலை 5:45 மணிக்கு புறப்பட்டு 11:58 மணிக்கு தார்வாட் ரயில் நிலையத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள் இந்த வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரயில் இயங்காது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications