100வது பிறந்த நாளை கொண்டாடும் மோடியின் தாயார்! நேரில் சந்தித்து ஆசி பெற்ற பிரதமர்! பாத பூஜை செய்தார்
காந்தி நகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹிராபா இன்று 100ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
நாட்டின் 14ஆவது பிரதமராகக் கடந்த 2014இல் நரேந்திர மோடி. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்தடுத்து இரு தேர்தல்களில் மோடியை முன்னிறுத்தியே பாஜக தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் முக்கிய தலைவர்களில் ஒருவராகத் திகழும் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபா இப்போது குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் இன்று தனது 100ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி காந்திநகரில் உள்ள இல்லத்தில் தனது தாயார் ஹிராபாவை காலை சந்தித்து ஆசி பெற்றார்.
மேலும், ஹிராபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாத பூஜையும் செய்தார். அவரது பிறந்த நாளையொட்டி வட்நகரில் உள்ள ஹட்கேஷ்வர் கோவிலில் சிறப்புப் பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. ஹிராபா நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என வேண்டி குஜராத்தில் பல இடங்களில் சிறப்புப் பூஜைகளும் நடைபெறுகிறது.
இந்தச் சூழலில் குஜராத் தலைநகர் காந்தி நகரில் உள்ள சாலை ஒன்றுக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாவின் பெயரை வைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாவின் பெயர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கச் செய்யவும் வருங்கால சந்ததியினர் அவரிடம் இருந்து பாடம் கற்கும் வகையிலும் அவரது பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications