தீபத் திருநாளில் மக்கள் மனதில் நம்பிக்கை ஒளியேற்ற ஸ்ரீநகர் சென்ற மோடி
ஸ்ரீநகர்: தீபாவளி பண்டிகையான இன்று பிரதமர் நரேந்திர மோடி சியாச்சின் போர்முனைக்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு ஸ்ரீநகருக்கு வந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனி விமானம் மூலம் உலகிலேயே உயரமான போர்க்களமான சியாச்சின் சென்றார். அங்கு அவர் ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். அவர்களுடன் சில மணிநேரம் இருந்த மோடி தனி விமானம் மூலம் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு மதியம் 2.10 மணிக்கு வந்தார்.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடியை ஜம்மு காஷ்மீர் ஆளுநர் ஓஹ்ரா, முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர். அவர் ராஜ் பவனில் வைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.
மேலும் அவர் ஆளும் தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்து பேசுகிறார். கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பாக் பகுதிக்கு அவர் செல்கிறார். மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை அவர் பார்வையிடுகிறார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கி இருக்கும் நிவாரண முகாமிற்கும் மோடி செல்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications