மொத்தம் 77 அடி.. உலகிலேயே உயரமான ராமர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி.. பிரமாண்டத்தின் பின்னணி
பனாஜி: கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில் உலகிலேயே மிக உயரமான ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த சிலை மொத்தம் 77 அடி உயரம் கொண்டது. சிலை முழுவதும் வெண்கலத்தால் செதுக்கப்பட்டுள்ள நிலையில் சிலையின் சிறப்பம்சம் பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண ஜீவோட்டம் மடம் அமைந்துள்ளது. பர்தகல் என்ற கிராமத்தில் இந்த மடம் அமைந்துள்ளது.

இந்த மடம் 570 ஆண்டுகால பாரம்பரியத்தை கொண்டதாக கூறப்படுகிறது. இங்கு உலகிலேயே மிக உயரமான ராமர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக 77 அடி உயரத்தில் பிரமாண்டமான வெண்கல ராமர் சிலை செதுக்கப்பட்டது. இந்த சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றது. பிரதமர் மோடி விழாவில் பங்கேற்று சிலையை திறந்து வைத்தார்.
இந்த சிலையை உருவாக்கிய சிற்பியின் பெயர் ராம் சுதார். இவர் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர். இவர் மிகவும் பிரபலமான சிற்பி ஆவார். இவர் தான் குஜராத்தின் ஒற்றுமைக்கான சிலை (வல்லபாய் படேல்) வடிவமைத்தவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இந்த மடம் தனது 570 ஆண்டு கால பாரம்பரியத்தை போற்றும் வகையில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று தொடங்கிய விழா டிசம்பர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் ஒரு பகுதியாக தான் பிரதமர் மோடி ராமர் சிலையை இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் ஆளுநர் அசோக் கஜபதி ராஜு, முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் மற்றும் கோவா அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications