மோடி பேச்சில் வல்லவர் தான், ஆனால் செயலில் தான்...: சசி தரூர்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பேச்சாற்றல் மிக்கவர். ஆனால் அவர் பேச்சை செயலில் காட்ட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் பிரதமர் நரேந்திர மோடியை அவ்வப்போது புகழந்து பேசி வருகிறார். இப்படி மோடியை புகழ்து பேசியதால் தான் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியை இழந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது மோடி பற்றி கூறுகையில்,
மோடி பேச்சாற்றல் மிக்கவர். அவர் திறமையாக பேசி வருகிறார். இந்த அரசின் பலமே அவரது பேச்சு தான். செயல் வீரருக்கு தான் வாக்களித்துள்ளோம் என்று மக்கள் நினைத்தார்கள். அவர் நன்றாக பேசுகிறாரே தவிர செயலில் அதை காட்டுவதாக தெரியவில்லை. அவர் கூறுவதை செயலில் காட்ட வேண்டும்.
எனக்கு பாஜகவில் சேரும் எண்ணம் இல்லை. நான் காங்கிரஸ்காரனாகத் தான் இருப்பேன். மோடி அரசில் பேச்சுக்கும், செயலுக்கும் இடையே உள்ள இடைவெளியில் ரதத்தையே விடலாம்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்பின் தலைவர்களின் செயல் பிரிவினையை ஏற்படுத்துவதாக உள்ளது. அமைச்சர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் சரி இல்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் கோட்சேவை புகழந்து கொண்டு, பெண்கள் எத்தனை குழந்தைகள் பெற வேண்டும் என்று பேசக் கூடாது. உங்கள் கட்சி இந்துத்துவத்தை தான் போதிக்கிறது.
இந்த விவகாரங்களில் மோடி அவர்களை பேசாமல் இருக்குமாறு கூறாமல் அவர் மௌனமாகிவிட்டார் என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications