145-வது பிறந்த நாள்: காந்தி நினைவிடத்தில் சோனியா, மன்மோகன் அஞ்சலி! ராகுல் புறக்கணிப்பு!
டெல்லி: மகாத்மா காந்தியின் 145-வது பிறந்த நாள் விழாவையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஆனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
மகாத்மா காந்தியின் 145-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடமானது மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று காலை காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களுடன் மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களும் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் டெல்லியில் இருந்தும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிலை.

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்கும் உத்தரவில் இருந்து அவர்களை காப்பாற்றும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. இந்த அவசர சட்டம் முட்டாள் தனமானது. அதை கிழித்து எறிய வேண்டும் என்று ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இதனால் ராகுல்காந்தி, மன்மோகன்சிங் இடையே அதிருப்தி உருவாகி உள்ளது. இதனாலேயே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பிரதமருடன் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications