ஆக்ஷன் எடுக்கணுமா? டிரெஸ்ஸை அவுத்து காட்டு.. மிட் நைட்டில் பெண்ணுக்கு வீடியோ கால்.. சிக்கிய போலீஸ்!
கான்பூர் : புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், டிரெஸ்ஸை கழற்றி உன் மார்பை காட்டு என போலீஸ் அதிகாரி கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேயும் கதையாக, பாதுகாப்பு தர வேண்டிய போலீஸே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் பெண் ஒருவர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக அப்பெண் பில்ஹவுர் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்து அப்பெண்ணுக்கு போனில் அழைத்த போலீஸ் அதிகாரி மகேந்திர சிங், அப்பெண்ணிடம், உன் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், வீடியோ காலில் டிரெஸ்ஸை கழற்றி, உன் மார்பைக் காட்டு என்று கூறியுள்ளார்.
நான் இப்போது உனக்கு வீடியோ கால் செய்வேன்.. உன் ஆடையை அவிழ்த்து உனது மார்பை எனக்குக் காட்ட வேண்டும். உன் புகாரை உடனே தீர்த்து வைக்கிறேன் என போலீஸ் அதிகாரி மகேந்திர சிங், புகார் அளித்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளுக்குப் புகார் அளித்துள்ளார் அந்தப் பெண். மேலும், தனது புகார் தொடர்பாக காவல் நிலையத்துக்குச் சென்றபோது அந்த போலீஸ் அதிகாரி தன்னை தகாத முறையில் தொட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அப்பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, அவரிடம் தவறாக நடந்துகொண்ட போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், கான்பூர் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால், அந்த போலீஸ்காரர் மீது கடுமையான நடவ்டிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
டிசிஎஸ் தொடர்ந்து விப்ரோ.. பாலியல் அச்சுறுத்தல், உடலுறவு, மதமாற்றம்.. பெண் ஐடி ஊழியரின் பகீர் புகார்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications