உலகக்கோப்பையில் மோடி.. உத்தராகண்டில் 40 பேர் உயிருக்கு போராடுறாங்களே! பூவுலகு சுந்தர்ராஜன் வேதனை
சென்னை: உத்தராகண்ட் சுரங்கத்தில் ஒரு வாரமாக 40 தொழிலாளர்கள் சிக்கி உயிருக்கு போராடி வரும் நிலையில் பிரதமர் மோடி உலகக்கோப்பையை பார்க்க செல்வதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் விமர்சித்து உள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்து உள்ளது சில்க்யாரா சுரங்கம். இந்த சுரங்கத்தில் பணிபுரிந்து வந்த 40 தொழிலாளர்கள் சிக்கி ஒருவாரமாக உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் காண உள்ளார்.

இதனை சுட்டிக்காட்டி பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஜி சுந்தர்ராஜன் விமர்சித்து உள்ளார். அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "தேசிய அவமானம், இந்தியப் பிரதமரிடம் யாராவது சொல்லவும், ஜி20 மாநாடு நடத்துவதில், ஊர் ஊராக சென்று, கலர் கலர் உடைகள் அணிந்து பலநாட்டு தலைவர்களை கட்டிபிடித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது, 2040 ல் வளர்ந்த இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஈரவெங்காய இந்தியாவில் எல்லாம் இல்லை உண்மையான வளர்ச்சி. உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கத்தில் 40 தொழிலாளர்கள் சிக்கி இன்றோடு 7 நாட்கள் ஆகிறது, ஒருவர் கூட மீட்கப்படவில்லை. மீட்பு பணியில் துளி அளவில் முன்னேற்றம் இல்லை. இதற்கான தீர்வை கண்டிருந்தால் அதுதான் வளர்ச்சி பெற்ற இந்தியா.
சிக்கிகொண்ட ஒருவர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. சந்திராயனிற்கு செல்வது எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியம், சிக்கியவர்களை மீட்பதற்கான தொழில்நுட்பமும். 7 நாட்கள் ஆகியும் மீட்க முடியாதது தேசிய அவமானம்தான். இந்த பேரவலம் கடந்த காலங்களில் நடந்திருந்தால் அனைத்து ஊடகங்களும் இதை எவ்வளவு பெரிய விஷயமாக மாற்றியிருக்கும்?" என்று குறிப்பிட்டு உள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள மற்றொரு பதிவில், "உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கத்தில் 40 தொழிலாளர்கள் சிக்கி இன்றோடு 7 நாட்கள் ஆகிறது, அவர்களை மீட்க திராணியில்லை, ஆனா நம்ம ஜீ பாருங்க உலக கோப்பை கிரிக்கெட்டை பார்க்க வந்திடுவார். கேட்டா இத "Cricket diplomacy" அப்படினு ஊடகங்கள் சொல்லும். இந்தியா வெற்றி பெற்றவுடன் ஏதோ மோடிதான் 5 விக்கெட் எடுத்த மாதிரி கூப்பாடு போடுவாங்க, நம்ம "ஜீ"யும் ஷாமிய கட்டிபிடிப்பார் பாருங்க... கொடும!" என்று பதிவிட்டு உள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications