14 நாள்தான் ஆராய்ச்சி.. அதற்குள் எல்லாம் தெரிந்துவிடும்.. சந்திரயான் 2ல் உள்ள குட்டி ஹீரோ இதுதான்!

சந்திரயான் 2வில் இருக்கும் பிரக்யான் என்று சிறிய ரோவர் நிலவில் முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சந்திரயான் 2ல் உள்ள லேண்டர் விக்ரம் உடன் தொடர்பு துண்டிப்பு

    டெல்லி: சந்திரயான் 2வில் இருக்கும் பிரக்யான் என்று சிறிய ரோவர் நிலவில் முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. இன்று அதிகாலை 5-6 மணிக்குள் இந்த ரோவர் நிலவில் இறங்க உளது.

    இந்தியா இன்று விண்வெளி அரங்கில் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் சந்திரயான் 2 நிலவில் இறங்க உள்ளது.

    நிலவின் தென் துருவத்தை நோக்கி சந்திரயான் 2 தனது பயணத்தை தொடங்கி 48 நாட்கள் முடிந்துவிட்டது. இன்னும் சில மணி நேரத்தில் சந்திரயான் 2 நிலவில் இறங்கி தனது ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறது.

    எப்படி முக்கியம்

    எப்படி முக்கியம்

    இந்தியாதான் முதல்முறையாக நிலவின் தென் துருவ பகுதிக்கு ஆய்வு கலம் ஒன்றை அனுப்புகிறது. சந்திரயான் 2ல் மூன்று முக்கியமான கருவிகள் அடங்கி உள்ளது. அதன்படி ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று. இதற்கு ஏற்கனவே நிலவை சுற்றிவர தொடங்கிவிட்டது.

    அடுத்து இரண்டு

    அடுத்து இரண்டு

    நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று. இந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்று. இந்த விக்ரம்தான் இன்னும் சில நிமிடங்களில் நிலவில் தரையிறங்க உள்ளது.

    என்ன ஆராய்ச்சி

    என்ன ஆராய்ச்சி

    இதில் ஆர்பிட்டார் சரியாக ஒரு வருடங்களுக்கு நிலவில் ஆராய்ச்சி செய்யும். நிலவை சுற்றிவந்தபடி அதை ஆர்பிட்டார் ஆராய்ச்சி செய்யும். சந்திரயான் 1 அனுப்பிய சாட்டிலைட்டை போலவேதான் இந்த ஆர்பிட்டரும் செயல்படும். ஆனால் இதன் திறன் அதை விட அதிகம்.

    வேறு என்ன

    வேறு என்ன

    அதே சமயம் விக்ரம் மற்றும் பிரக்யான் இரண்டும் நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்யும். இதில் விக்ரம் என்பது லேண்டர் ஆகும். இதுதான் நிலவில் மெதுவாக களமிறங்கும். இதற்கு உள்ளே பிரக்யான் என்ற ரோவர் இருக்கும். விக்ரம் மிக மிக கவனமாக நிலவில் தரையிறங்கி ஒரே இடத்தில் இருந்து ஆராய்ச்சி செய்யும். பின் நேரடியாக பூமிக்கு இது தகவல்களை அனுப்பும்.

    நகரத்து

    நகரத்து

    இந்த லேண்டரால் வேறு எங்கும் நகர்ந்து செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் விக்ரம் உள்ளே இருக்கும் ரோவர் ரோபோவான பிரக்யான் 500 மீட்டர் வரை நகர்ந்து செல்ல கூடிய திறன் கொண்டது. சந்திரயான் 2 திட்டத்தின் மெயின் ஹீரோ யார் என்றால் அது பிரக்யான்தான். பிரக்யான் என்பது ஊர்ந்து செல்ல கூடிய ரோவர் வகை ரோபோட் ஆகும். இது வெறும் 27 கிலோதான் கொண்டது.

    என்ன ஆராய்ச்சி

    என்ன ஆராய்ச்சி

    இதில் நிறைய ஆராய்ச்சி கருவிகள் இருக்கும். நிமிடத்திற்கு 1 செமி தூரம் இது நகர கூடியது. மொத்தம் 14 நாட்கள் மட்டுமே நிலவில் இது ஆராய்ச்சி செய்யும். ஆம் வெறும் 14 நாட்களில் இது மொத்தமாக தனது ஆராய்ச்சிகளை முடித்துவிடும். அதன்பின் இதன் வாழ்நாள் முடிந்துவிடும்.

    எப்படி அனுப்பும்

    எப்படி அனுப்பும்

    இதை சுமந்து செல்லும் விக்ரம் லேண்டர் 1400 கிலோ எடை கொண்டது. பிரக்யான் தனது ஆராய்ச்சி சிக்னல்களை விக்ரமிற்கு அனுப்பும். அதன்பின் விக்ரம் பூமிக்கு முடிவுகளை அனுப்பும். விக்ரமின் ஆயுட்காலமும் 14 நாட்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன முடிவுகள்

    என்ன முடிவுகள்

    பிரக்யான் செய்யும் ஆராய்ச்சி முடிவுகளை வைத்துதான் நிலவில் இந்தியா தனது ஆராய்ச்சிகளை தொடரும். சரியாக 14 நாட்களில் பிரக்யான் தனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து பணிகளையும் மொத்தமாக முடித்துவிட்டு செயலிழக்கும்.

    நாசா எப்படி

    நாசா எப்படி

    அதாவது செப்டம்பர் 22ம் தேதிக்குள் நிலவு ஆராய்ச்சி குறித்த முடிவுகள் தெரிய வரும். இந்த முடிவுகளை இஸ்ரோ நல்லெண்ன அடிப்படையில் நாசாவுடனும் பகிர்ந்து கொள்ள போகிறது. இந்த முடிவுகளை பொறுத்தே நிலவில் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+