ஆட்சிக்கு வந்தால்.. தேர்தல் ஆணையர்களை ஜெயிலில் போடுவோம்... அம்பேத்கர் பேரன் சர்ச்சை பேச்சு
Recommended Video

மும்பை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் ஆணையர்களை இரண்டு நாளைக்கு சிறையில் போடுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பேசியுள்ளார்.
அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி, அம்பேத்கர் முன்னணி பரீப் பகுஜன் மகாசங் மற்றும் அசாதுதீன் ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இணைந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதியிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் பிரகாஷ் அம்பேத்கர் சோலப்பூர் மற்றும் அகோலா ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

வியாழக்கிழமை மகாராஷ்டிராவின் யமத்மாலில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பிரகாஷ் அம்பேத்கர் பேசுகையில், "புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை இழந்துள்ளோம். ஆனால் அமைதியாக இருக்க வேண்டுமாம். இந்த தாக்குதல் குறித்து பேசக்கூடாது என்கிறார்கள். தேர்தல் ஆணையம் எப்படி எங்களை இப்படி சொல்லலாம். சட்டப்படி இதைப்பற்றி பேச உரிமை உள்ளது. நான் பாஜகவை சேர்ந்தவன் கிடையாது. ஒருவேளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தலை ஆணையர்களை இரண்டு நாளைக்கு சிறை வைப்போம். இந்த தேர்தல் ஆணையம் பொதுவாகச் செயல்படுகிறது என்று யாரும் எண்ண வேண்டாம். அது, ஆளும் மத்திய பாஜக அரசுக்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படுகிறது" இவ்வாறு கூறினார்.
மேலும் பிரகாஷ் அம்பேத்கர் பேசுகையில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மோடியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பணம் மீண்டும் செல்லும் என அறிவிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
சட்டமேதை அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் இப்படி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் தேர்தல் அதிகாரிகளிடம் பிரகாஷ் அம்பேத்கரின் பேச்சு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. இதனிடையே தான் ஒரு விஷயத்தை பொதுவாக சொன்னதாகவும் தேர்தல் ஆணையம் பற்றி கருத்து மட்டும் மிகைப்படுத்தப்பட்டதாகவும் பிரகாஷ் அம்பேத்கர் விளக்கம் அளித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications