புதிய பிரதமராக மோடி நியமனம்! ஆட்சி அமைக்க அழைத்தார் ஜனாதிபதி!!
டெல்லி: நாட்டின் புதிய பிரதமராக பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நியமித்து மே 26-ந் தேதியன்று புதிய அரசு அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் நரேந்திர மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டத்திலும் மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ராஜ்நாத்சிங் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் 15 பேர் அடங்கிய குழு முதலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தது.
அப்போது பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதியிடம் ராஜ்நாத்சிங் வழங்கினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து நரேந்திர மோடி ஜனாதிபதியை தனியே சந்தித்தார்.. அப்போது தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மோடிக்கு பூங்கொத்து கொடுத்து ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமராக மோடி நியமனம்- ஆட்சி அமைக்க அழைப்பு!
பின்னர் ஜனாதிபதியிடம் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை முறைப்படி கோரினார் நரேந்திர மோடி. இதைத் தொடர்ந்து நரேந்திர மோடியை புதிய பிரதமராக நியமித்தார் ஜனாதிபதி.
மேலும் மே26-ந் தேதியன்று ஆட்சி அமைக்கவும் ஜனாதிபதி முறைப்படி அழைப்பும் விடுத்துள்ளார். இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி, வரும் 26-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்க இருப்பதாக தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி மாளிகை செயலர், நரேந்திர மோடியை நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications