15–வது லோக்சபா கலைப்பு - புதிய எம்.பி.க்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் தேர்தல் ஆணையம் கொடுத்தது!
டெல்லி: நாட்டின் 15-வது லோக்சபா அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. புதிய எம்.பி.க்கள் பட்டியலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தேர்தல் ஆணையம் வழங்கியது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டில் 16-வது லோக்சபாவுக்கு 9 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை கடந்த 16-ந் தேதி நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 543 புதிய எம்.பி.க்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரித்தது.
இந்நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் நேற்று சந்தித்து 543 புதிய எம்.பி.க்களின் பட்டியலை வழங்கினார். அப்போது தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ். பிரம்மா, நசீம் ஜெய்தி ஆகியோர் உடனிருந்தனர்.
லோக்சபா கலைப்பு
முன்னதாக, பதவி விலகிய பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, 15-வது லோக்சபாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலைத்து நேற்று உத்தரவிட்டார்.
புதிய எம்.பி.க்கள் பட்டியலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தேர்தல் ஆணையம் வழங்கியதைத் தொடர்ந்து புதிய லோக்சபாவையும் அரசையும் அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கி விடும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications