125 கோடி இந்தியர்களை மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட வைத்து விட்டீர்கள்.. ராணுவ வீரர்களிடம் மோடி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார்.
Recommended Video

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள குரேஸ் பகுதியில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.
பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பந்திப்போரா மாவட்ட எல்லையில் உள்ள குரேஸ் என்ற ஊரில் படை வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடினார்.

அப்போது ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய அவர் நாட்டில் உள்ள 125 கோடி இந்தியர்களையும் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட வைத்தீர்கள் என பாராட்டு தெரிவித்தார். மேலும் உங்களுடைய கனவுகளும் பொறுப்புகளும் எங்களுடைய பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
மொத்த நாடும் உங்கள் தோளுக்கு தோள் கொடுக்கும் என்றும் அவர் கூறினார். மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு 2014ஆம் ஆண்டு எல்லையில் உள்ள சியாச்சின் மலை உச்சியில் தீபாவளியை கொண்டாடினார்.
PM @narendramodi celebrates #Diwali with Army & BSF in the Gurez Valley of Jammu & Kashmir, offers sweets & exchanged greetings with jawans pic.twitter.com/BU9spqvh7N
— Doordarshan News (@DDNewsLive) October 19, 2017
இதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு பஞ்சாப்பில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் மோடி கொண்டாடினார். கடந்த ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications