எலி மாதிரி அங்குமிங்கும் அலைகிறது பாஜக.. பிரியங்கா கடும் தாக்கு
ரேபரேலி: பதவியைப் பிடிப்பதற்காக, எலி போல கிடைக்கும் இடத்திலெல்லாம் நுழைந்து அலைந்து திரிகிறது பாஜக என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலியில் பிரியங்கா காந்தி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக சாடினார்.
பிரியங்காவின் பேச்சிலிருந்து...

அப்படியே எலி மாதிரி
பயந்து நடுங்கிப் போய்க் கிடக்கிறது பாஜக. பதவி கிடைக்காமல் போய் விடுமோ என்று அஞ்சுகிறது. இதனால் எலி போல, கிடைக்கும் இடத்தில் எல்லாம் புகுந்து அலைந்து திரிகிறது.

பொய் மூட்டைகள்
பாஜகவில் தலைவர்கள் பேசுவது எல்லாமே பொய்கள்தான். இதை இவர்கள் தொடர்ந்து பேசத்தான் செய்வார்கள்.

என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கட்டும்
அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். நமக்குக் கவலை இல்லை.அவர்கள் சொல்வதில் புதிதாக எதுவும் இல்லை.

யாரைப் பற்றியும் எனக்குப் பயம் இல்லை
எனக்கு யாரைப் பற்றியும் பயம் இல்லை. அவர்கள் மேற்கொள்வது அவமானகரமான அரசியல். அழிவு அரசியல், எதிர்மறை அரசியல்.

ஆனால் பொறுமை மீறினால்
ஆனால் நான் தொடர்ந்து அமைதியாக இருக்க மாட்டேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களை விட அதிகமாகவே நான் பதிலளிப்பேன் என்றார் பிரியங்கா காந்தி.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications