எங்க குடும்பத்துக்கு விமான நிலையத்தில் சலுகைகள் காட்டவே வேண்டாம்: பிரியங்கா
டெல்லி: விமான நிலையங்களில் தனக்கும், தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை திரும்ப பெற வேண்டும் என சிறப்பு பாதுகாப்பு படை தலைவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா மற்றும் அவரது கணவர் வதேரா ஆகியோர் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால், நாட்டிலுள்ள எந்த விமான நிலையங்களிலும் அவர்களுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லை.

இந்நிலையில், சமீபத்தில் புதிய விமான போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்ற கஜபதி ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும், விமான நிலையங்களில் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு விலக்கானவர்கள் அல்ல. அது போல வதேராவும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டே ஆக வேண்டும். அதற்கு ஏதுவாக அவரது பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, பிரியங்கா தானாக முன்வந்து, தனக்கும் தனது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் குழந்தைகளுக்கு, விமான நிலையங்களில் வழங்கப்படும் சலுகைகள் தேவையில்லை என்று கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், விமான நிலையத்தில் வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும். பாதுகாப்பை நாங்கள் கேட்கவில்லை. அவர்களாகவே வழங்கினர். தனியாக செல்லும் போது எனது கணவர் சோதனை செய்யப்படுகிறார். இந்நிலையில் விலக்கு அளிக்கப்படும் போது, அவருக்கு சங்கடமாக உள்ளது. முன்னரே விலக்கு அளிக்க வேண்டும் என கூறியுள்ளேன்.
நாங்கள் விமான நிலையத்திற்கு வரும் போது, பயணிகளுக்கு இடையூறு இன்றி இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். எனது கணவருக்கு உள்ள பாதுகாப்பை விலக்க வேண்டும் என கருதும் போது, எனக்கும் எனது குழந்தைகளுக்கும் அளிக்கப்படும் பாதுகாப்பையும் விலக்கி கொள்ள வேண்டும். நானும், எனது கணவரும் வழக்கம் போல், விமான நிலையங்களுக்கு செல்வோம். என்னுடன் வரும் போது வதேராவை சோதனை செய்யமால் இருக்க நாங்கள் கோரிக்கை விடவில்லை என கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications