4 நாய்க்குட்டிக்கு அடைக்கலம் கொடுத்த தாய், மகளை கொலவெறியில் தாக்கிய நபர்: வீடியோ
புனே: புனேவில் தெருவில் சுற்றித்திரிந்த 4 நாய் குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தாய் மற்றும் மகளை ஒருவர் தனது காலணியால் தாக்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே கோத்ருட் பகுதியில் உள்ள மகாத்மா குடியிருப்பு சொசைட்டியில் வசித்து வருபவர்கள் செஜால் சாராப் மற்றும் அவரின் தாய் சோனாலி. அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நான்கு குட்டிகளை போட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் நாய் இறந்துவிட்டது.

இதனால் குட்டிகள் பசியால் வாடியதை பார்த்த செஜால் மற்றும் சோனாலி அவைகள் மீது பாவப்பட்டு வீட்டிற்கு தூக்கி வந்தனர்.
நாய்க்குட்டிகளால் சொசைட்டியில் வசித்து வரும் மிலிந்த் காலே(45) என்பவர் ஆத்திரம் அடைந்து அவைகளை வந்து எடுத்துச் செல்லுமாறு முனிசிபாலிட்டி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்தபோது நாய்க்குட்டிகளை தர செஜாலும், சோனாலியும் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து மிலிந்த் தாய் மற்றும் மகளுடன் தெருவில் வைத்து சண்டை போட்டார். மேலும் தனது ஷூவை கழற்றி செஜால் மற்றும் சோனாலியை சரமாரியாக தாக்கினார்.
மேலும் கையாலும் அவர்களின் தலைகளில் ஓங்கி ஓங்கி அடித்தார். அவர் தாக்கியதில் செஜாலின் பல் உடைந்தது. இந்த காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில் செஜால் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மிலிந்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தனர். மிலிந்தை ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications