பாதுகாப்பு குறைபாடல்ல.. சதி! போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட சமூகவிரோதிகள்.. பஞ்சாப் பாஜக பகீர்
அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமருக்கு நடந்தது பாதுகாப்பு குறைபாடு அல்ல, திட்டமிட்ட சதி என மாநில பாஜக தலைவர் அஸ்வனி சர்மா குற்றம்சாட்டியுள்ளார். சமூகவிரோதிகள் கருப்பு நிற போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டு போராட்டம் செய்ய வைத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி பெரோஸ்பூருக்கு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று சென்றிருந்தார். அப்போது விமான மூலம் செல்லவிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக விமான பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து சாலை மார்க்கமாக பிரதமர் வரும் கடைசி நேர பயணம் குறித்து பஞ்சாப் தலைமை செயலாளர், காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பச்சை சிக்னல் கொடுத்தவுடன்தான் பிரதமர் கார் பெரோஸ்பூர் நோக்கி புறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

15 முதல் 20 நிமிடங்கள்
இந்த நிலையில் பாலத்தில் பிரதமர் வரும் போது விவசாயிகளின் போராட்டத்தால் அவரது காரும் பாதுகாப்பு அதிகாரிகளின் காரும் 15 முதல் 20 நிமிடங்கள் ஸ்தம்பித்தன. இதையடுத்து நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி திரும்பி சென்றார். இதுகுறித்து இதுகுறித்து பஞ்சாப் மாநில பாஜக தலைவர் அஸ்வனி சர்மா கூறுகையில் பாஜக பேரணிக்கு பேருந்துகளில் வந்த ஆதரவாளர்கள் ஏற்கெனவே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பஞ்சாப் காங்கிரஸ்
ஏற்கெனவே அந்த பிரச்சினை ஓடிக் கொண்டிருந்தது. இந்த சூழலில் பிரதமரை அங்கு வரவழைத்ததை பார்த்தால் ஏதோ சதி திட்டமாக இருக்கலாம் என்றே தெரிகிறது. பஞ்சாப் காங்கிரஸ் அரசின் உத்தரவின் பேரில்தான் அந்த போராட்டமேநடந்துள்ளது. இதனால்தான் பாதுகாப்பு குறைபாடும் ஏற்பட்டது.

விமான பயணம்
பிரதமரின் பயணம் விமான பயணமாக இருந்தாலும் மாற்று வழிகளும் முடிவு செய்யப்பட்டு வைத்திருப்பது வழக்கம். இந்த விவகாரத்திலும் அப்படித்தான் நடந்துள்ளது. தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு இது தெரியும். அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த பின்னரே பிரதமர் சாலை பயணம் மேற்கொண்டார்.

பஞ்சாப் காங்கிரஸ்
எனவே டெல்லி காங்கிரஸ் மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் இணைந்து ஒரு சதியை தீட்டியுள்ளனர். பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் மாநில அரசு கோட்டைவிட்ட விவகாரம் குறித்து ராகுல் காந்தி மவுனம் காத்து வருகிறார். பிரதமரின் கான்வாய் சிக்கிய இடத்தில் பஞ்சாப் தலைமை செயலாளரோ டிஜிபியோ அந்த இடத்தில் இருக்கவில்லை. எனவே காவல் துறையின் கருப்பு நிற காரில் போராட்டக்காரர்கள் அழைத்து வரப்பட்டு போராட்டம் நடத்த வைக்கப்பட்டுள்ளார்கள் என அஸ்வனி குற்றம்சாட்டினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications