தலித்களிடையே அரசியல் தலைவர்கள் உருவாவதை தடுக்கும் மாயாவதி: ராகுல் தாக்கு
டெல்லி: உத்தரப்பிரதேசத்தின் தலித் மக்களிடையே அரசியல் தலைவர்கள் உருவாவதை பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதி தடுத்து வருகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் தலித் மேம்பாடு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, தலித் மக்கள் அம்பேத்கரை தலைவராக கொண்டுள்ளனர். அதன் பின்னர் கன்சிராமை தலைவராக ஏற்றனர்.
தற்போது மாயாவதி தலைவராக இருக்கிறார். ஆனால் தலித் மக்களிடத்தில் புதிய அரசியல் தலைவர்கள் உருவாகக் கூடாது என்பதில் அவர் தன் முனைப்புடன் செயல்படுகிறார் என்றார்.

ஊழலுக்கு எதிரான ஆயுதம் ஆர்டிஐ
இதைத் தொடர்ந்து வால்மீகி சமாஜ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, ஊழல்தான் மிகப் பெரிய பிரச்சனை என்று மக்கள் கூறுகின்றனர். இந்த ஊழலுக்கு எதிரான ஆயுதமாக திகழ்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

அரசை கேள்வி கேளுங்கள்.
அப்படிப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். இந்த சட்டம் மூலம் ஒவ்வொரு குடிமகனும் அரசை கேள்வி கேட்க முடியும்.

உண்மையை பேசினேன்..
தண்டனை பெற்ற எம்.பி.க்களைப் பாதுகாக்கும் அவசர சட்டம் தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் என்னிடம் நீங்கள் தவறாகப் பேசிவிட்டீர்கள் என்றார். ஆனால் நானோ, உண்மையைப் பேச வேண்டிய தருணம் அது என்று பதிலளித்தேன்.

பாஜக தோற்கும்
2004,2009 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைத் தழுவியது. 2014ஆம் ஆண்டும் அப்படித்தான் நடக்கப் போகிறது.

நாங்க இந்தியாவோட குரல்
இந்தியாவின் குரலாக இருப்பது காங்கிரஸ் மட்டுமே. காங்கிரஸ் கட்சி மட்டுமே ஏழை எளியமக்களுக்கான கட்சி என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications