17 மாவட்டங்கள், 833 கி.மீ! அசாமிலிருந்து 5ம் நாள் பயணம்! பாரத் நியாய யாத்திரையில் ராகுல் உற்சாகம்
திஸ்பூர்: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ராகுல் காந்தி இரண்டாம் கட்ட பாரத் ஜடோ யாத்திரையை தொடங்கியுள்ளார். யாத்திரையின் 5வது நாளான இன்று அசாம் மாநிலத்தில் மக்களை ராகுல் காந்தி சந்திக்கிறார்.
கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டிருந்த பாரத் ஜடோ யாத்திரை காங்கிரஸுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்கொண்டிருந்த இடர்பாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏற்கெனவே ஆட்சியிலிருந்த மாநிலத்தில் ஆட்சியை இழந்தது, சொந்த கட்சியின் நிர்வாகிகளே கட்சி தலைமைக்கு எதிராக புகார்களை எழுப்பியது, மூத்த தலைவர்களின் விலகல், பாஜகவுக்கு தாவிய முக்கிய நிர்வாகிகள் என காங்கிரஸ் தனது மொத்த பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டே வந்திருந்தது.

இப்படி இருக்கையில்தான் பாரத் ஜடோ யாத்திரை கட்சியின் தொண்டர்களுக்கு காங்கிரஸ் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர்கள் ராகுல் காந்தியுடன் வீதியிறங்கி நடந்தார்கள். களப்பணியில் ஈடுபட்டார்கள், 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தன்னை வளர்த்துக்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டது. அதன் அங்கமாக தொண்டர்கள் இருந்தார்கள். இந்நிலையில் 'பாரத் ஜடோ நியாய யாத்திரை' என இரண்டாம் கட்ட யாத்திரையை ராகுல் காந்தி தொங்கியுள்ளார்.
இந்த யாத்திரை மணிப்பூரில் தொடங்கி மொத்தமாக 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்ற தொகுதிகள் என 67 நாட்கள் நீள்கிறது. இறுதியாக மகாராஷ்டிராவின் மும்பையில் முடிவடைகிறது. சில இடங்களில் பேருந்திலும், பல இடங்களில் நடத்தும் சுமார் 6,713 கி.மீ தூரத்தை ராகுல் காந்தி இந்த யாத்திரை மூலம் கடக்கிறார்.
பயண திட்டத்தின்படி மணிப்பூர், நாகலாந்தில் யாத்திரையை முடித்துள்ள அவர், இன்று அசாமில் யாத்திரையை தொடங்குகிறார். அசாமில் 8 நாட்களில் 17 மாவட்டங்களில் 833 கி.மீ தூரமும், இதற்கடுத்து அருணாச்சலப் பிரதேசம், மேகலாயாவில் தலா ஒரு நாள், மேற்கு வங்கத்தில் 5 நாட்களில் 7 மாவட்டங்களில் 523 கி.மீ தொலைவும், பீகாரில் 4 நாட்களில் 7 மாவட்டங்களில் 425 கி.மீ தூரம், ஜார்கண்டில் 8 நாட்களில் 13 மாவட்டங்களில் 804 கி.மீ என பயணம் மேற்கொள்கிறார்.
மேலும், ஒடிசாவில் 4 நாட்களில் 4 மாவட்டங்களில் 341 கி.மீ, சத்தீஷ்கரில் 5 நாட்களில் 7 மாவட்டங்களில் 536 கி.மீ, உத்தரப் பிரதேசத்தில் 11 நாட்களில் 20 மாவட்டங்களில் 1,074 கி.மீ, மத்திய பிரதேசத்தில் 7 நாட்களில் 9 மாவட்டங்களில் 698 கி.மீ, குஜராத்தில் 5 நாட்கள் 445 கி.மீ, மகாராஷ்டிராவில் 5 நாட்கள் 479 கி.மீ பயணம் மேற்கொண்டு இறுதியாக மார்ச் 21ம் தேதி மும்பையில் பயணத்தை முடிக்கிறார். ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் பிஸியாக உள்ள மத்திய அரசு, மக்களை கண்டுகொள்ளவில்லை என இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications