நாடாளுமன்ற வளாகத்தில் வாயில் கருப்பு துணி கட்டி ராகுல் தலைமையில் காங். எம்.பிக்கள் போராட்டம்!
டெல்லி: மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்ட அக்கட்சி எம்.பிக்கள் வாயில் கருப்புத் துணி கட்டியபடி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று தர்ணா போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் பங்கேற்றனர்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் ராமரின் பிள்ளைகள்; ராமர் பிள்ளைகள் டெல்லியில் ஆட்சியை செய்வார்கள்.. மற்றவர்களெல்லாம் முறையற்று பிறந்தவர்கள் என்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசினார்.

இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதனால் நாடாளுமன்ற இரு சபைகளின் நடவடிக்கைகள் முடங்கின.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற இரு சபைகளிலும் தாம் பேசிய பேச்சுக்காக மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்தாக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் சாத்வி நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டவர். அமைச்சர்கள் பேசும் போது சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம். தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டார். இதனால் எதிர்க்கட்சிகள் சபையை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் பிரதமரின் வேண்டுகோளை நிராகரித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் எம்.பிக்கள் அனைவரும் வாயில் கருப்புத் துணியை கட்டியிருந்தனர்.
மேலும் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டும்; மத்திய அமைச்சர் பதவியில் இருந்து சாத்வியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் கூடிய பதாகையை ஏந்தியவாறு காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். ராகுல் தலைமையிலான இந்தப் போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications