விடிய, விடிய கொட்டிய மழை.. வெள்ளத்தில் மிதக்கிறது பெங்களூர்.. ஏரியில் உடைப்பு, டிராபிக் ஜாம்!
பெங்களூர்: பருவமழையின் தீவிரம் பெங்களூரு நகரை உலுக்கி வருகிறது. இந்த வாரம் முழுக்கவே இரவு கன மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல், இன்று காலை வரை, மழை தொடர்ந்து கொட்டியது.
நேற்று இரவு சுமார் 11 மணிக்கு ஆரம்பித்த மழை இன்று காலைவரை விட்டு, விட்டு கொட்டி தீர்த்தது. இந்த பெரும் மழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நகரின் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. ஏரி நீர் நிரம்பியும் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்த சம்பவம் பெங்களூரில் பதிவாகியுள்ளது.
|
ஏரி உடைப்பு
பன்னேர்கட்டா சாலையிலுள்ல ஹூலிமாவு ஏரி பரப்பில் பெரியது. பெருமழை காரணமாக அந்த ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, நீர் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இந்த குட்டி வீடியோ இணைப்பில் அதை நீங்கள் பார்க்கலாம்.
|
வாகனங்கள் பரிதாபம்
ஒசூர் சாலை, பொம்மனஹள்ளி அருகேயுள்ள கோடிச்சிக்கனஹள்ளி பகுதியில் இடுப்பு அளவுக்கு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சிக்கி சில பைக்குகள் நீரில் அடித்து செல்லப்பட்டன.

வீடுகளுக்குள் வெள்ளம்
நகரின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசித்தவர்கள் வெளியேறினர். அப்படி ஒரு காட்சியை இந்த படத்தில் பார்க்கலாம்.
|
தண்ணீரில் மிதக்கும் வாகனங்கள்
தாழ்வான பகுதிகளில், மழை நீரில் சிக்கி வாகனங்கள் மிதக்கின்றன. அப்படி ஒரு காட்சிதான் இதில் டிவிட் செய்யப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் சிட்டி
ஐடி தொழில் நிறுவனங்கள் சூழ்ந்துள்ள, ஒசூர் ரோட்டிலுள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டியும் மழை பாதிப்பில் தப்பவில்லை. மழை காரணமாக அங்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்ததால் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உரிய நேரத்திற்கு அலுவலகம் சென்று சேர்வதில் சிக்கல் நிலவியது.

எங்கும் நெரிசல் மயம்
சாதாரண நாட்களிலேயே டிராபிக் நெரிசலில் சிக்கி தவிக்கும் பெங்களூரு இன்று உட்சபட்ச நெரிசலில் மிதந்தது.
ஒசூர் ரோடு, பன்னேர்கட்டா ரோடு என முக்கிய சாலைகள் அனைத்திலும் டிராபிக் நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications