பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 நாளாக பேய் மழை- 9 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் ஐந்து நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்மழையால் நான்கு மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

பலத்த மழையால் ஏராளமான கிராமங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.

தற்போது பெய்து வரும் கனமழையால், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும், 47 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications