சடலத்துடன் உறவு.. 60 வயது விதவை பெண்ணை கொன்று.. அதிர்ச்சி தந்த சைக்கோ 19 வயது இளைஞர்..!
60 வயது பெண்ணை கொன்று சடலத்துடன் உறவு கொண்டுள்ளார் ஒரு இளைஞர்
ஜெய்ப்பூர்: 60 வயது பெண்ணை கொலை செய்து, அந்தசடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளார் 19 வயது சைக்கோ இளைஞர்.. இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
நாடு முழுவதும் குற்ற செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.. இந்த குற்ற வழக்குகள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகமும் (என்சிஆர்பி) வருடாவருடம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வரும்..
அந்தவகையில், கடந்த 2020ம் ஆண்டுக்கான குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை நேற்று வெளியிட்டிருந்தது. அதில், 2020-ல் நாட்டில் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரத்து 35 குற்றங்கள் நடந்துள்ளன... இது கடந்த 2019-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 11.8 சதவீதம் அதிகமாகும் என்றும் கூறியிருந்தது..

மத்திய பிரதேசம்
அதுமட்டுமல்லாமல் கடந்த 2020ம் ஆண்டில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடந்தது ராஜஸ்தானில்தான் என்றும் கூறியிருந்தது.. இதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் உள்ளன என்றுகூறி, அதற்கான புள்ளிவிவர தகவலையும் வெளியிட்டிருந்தது.. இப்போது இன்னொரு பகீர் சம்பவம் இதே ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

கொடூரம்
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் பிலிபங்கா என்ற பகுதியில்தான் இப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது.. இங்கு 60 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.. இவர் கணவனை இழந்தவர்.. சம்பவத்தன்று இரவு திடீரென அந்த பெண்ணின் வீட்டிற்குள் 19 வயது இளைஞர் ஒருவர் நுழைந்துள்ளார்.. அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்..

சடலம்
ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் சத்தம் போடவும், ஆத்திரத்தில் அவரை இளைஞர் கொன்றுவிட்டார். சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்த அந்த சடலத்துடன், உறவில் ஈடுபட்டுள்ளார்.. அதற்கு பிறகு அங்கிருந்து கிளம்பி, அந்த பெண்ணின் உறவினர் வீட்டிற்கு சென்று, நடந்த சம்பவங்களை ஒன்றுவிடாமல் சொல்லி உள்ளார்..

சைக்கோ இளைஞர்
இதை கேட்டு அதிர்ந்து போன அவர்கள், உடனடியாக பிலிபங்கா ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில் சைக்கோ இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.. அவர் பெயர் சுரேந்தர் என்பது தெரியவந்துள்ளது.. மாண்டியா என்று இன்னொரு பெயரும் உண்டாம்... கொலை செய்யப்பட்ட பெண்ணை, சம்பவ தினத்துக்கு முன்தினம் தான் சந்தித்துள்ளார்..

நெக்ரோபிலியா
அப்போதே பாலியல் தொல்லையும் தந்து, செல்போனையும் பறித்து சென்றுள்ளார்... இதுகுறித்து அந்த பெண், உடனே போலீசாரிடமும் தெரிவித்திருக்கிறார்.. மறுநாள்தான் சுரேந்தர் வீட்டிற்குள் புகுந்து இவ்வாறு செய்தது தெரியவந்தது.. தற்போது அவர்மீது நெக்ரோபிலியா, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இறந்தவர்களின் உடல்களுடன் உடலுறவு கொள்வதற்கு நெக்ரோபிலியா என்று பெயர்).
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications