கல்யாணம் ஆயிருச்சா? இதை பாருங்க.. மாத வருமானத்தை சொல்ல மறுத்த கணவன்.. மனைவி அதிரடி முடிவு!
ஜெய்ப்பூர்: மாத வருமானம் எவ்வளவு என்று கணவன் சொல்ல மறுத்த நிலையில், அவரது மனைவி மத்திய தகவல் ஆணையத்தில் முறையிட்டார். அவருக்கு அங்கு வெற்றி கிடைத்துள்ளது. கணவரின் வருமானத்தை 15 நாட்களுக்கு வருமான வரித்துறை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய தகவல் ஆணையம்.
பொதுவாக கணவரின் வருமானம் மனைவிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இதேபோல் மனைவியின் வருமானம் கணருவக்கு தெரியாமல் இருக்காது.
எனினும் விதிவிலக்காக சில வீடுகளில் இருவரும் தங்கள் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு செலவு செய்வதற்காகவும், தன்னுடைய சுயதேவைகளை மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ தெரியாமல் பூர்த்தி செய்வதற்காகவும் வருமானத்தை மறைக்கிறார்கள்.

அதிரடி காட்டிய மனைவி
அப்படித்தான் ராஜஸ்தானைச் சேர்ந்த கணவர் ஒருவர் மனைவியிடம் வருமானத்தை மறைத்திருக்கிறார். கேட்டு கேட்டு பாரத்த அவர் ஒரு கட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முறையிட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது.

மனு போட்ட மனைவி
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் ரஹமத் பானு. இவரது கணவர் தன்னுடைய வருமானத்தை பானுவிடம் தெரிவிக்க மறுத்தார். இதனை அடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் பானு, தனது கணவரின் வருமான விவரத்தை தெரிவிக்க வேண்டும் என வருமான வரித்துறையிடம் அவர் கேட்டுள்ளார்.

உரிமை இருக்கிறது
ஆனால் மூன்றாம் நபரிடம் இதுபோன்ற விவரத்தை தெரிவிக்க முடியாது என வருமான வரித்துறை மறுத்துவிட்டது. இதை எதிர்த்து ரஹமத் பானு மத்திய தகவல் ஆணையத்தில் (CIC) மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்த மனுவை பரிசீலித்த மத்திய தகவல் ஆணையம், RTI சட்டத்தின் கீழ் கணவரின் மொத்த வருமான விவரத்தை தெரிந்துகொள்ள மனைவிக்கு முழு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது.

வெற்றி பெற்ற மனைவி
RTI சட்டத்தின் கீழ் இதுபோன்ற தகவலை மூன்றாம் நபர் கோர முடியாது என்ற வாதத்தை மத்திய தகவல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும் மனுதாரர் கோரிய விவரத்தை இந்த உத்தரவு கிடைத்த 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என ஜோத்பூர் வருமான வரித்துறைக்கு மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications