தனது யோகா குருவை வைத்து யோகா தின நிகழ்ச்சி நடத்திய ராஜஸ்தான் முதல்வர்
ஜெய்பூர்: சர்வதேச யோகா தினத்தன்று ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே யோகா செய்து அசத்தினார்.
சர்வதேச யோகா தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவி சர்ச்சையில் சிக்கியுள்ள ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சர்வதேச யோகா தினத்தன்று ஜெய்பூரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பொதுமக்களுடன் சேர்ந்து அவர் பல்வேறு ஆசனங்களை எளிதில் செய்தார். மேடையில் ராஜேவின் யோகா குரு ஆசனங்களை செய்ய செய்ய அவரை பார்த்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் யோகா செய்தனர்.
சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையில் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற ஐ.நா. சபை ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications