ராஜஸ்தானில் மீண்டும் நூலிழையில் காங்கிரஸ் ஆட்சி? இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா Exit Poll முடிவு!
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 86 தொகுதிகளில் இருந்து 106 தொகுதிகள் வரை வெற்றிபெறக் கூடும் என இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானை பொறுத்தவரை மொத்தம் 200 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 101 இடங்கள் இருந்தால் போதுமானது.
ராஜஸ்தானில் கரண்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மித் இறந்துவிட்டதால் அந்த தொகுதியை தவிர்த்து 199 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. அதன்படி ஆட்சியமைக்க தற்போதைய சூழலில் 100 இடங்கள் வென்றாலே போதுமானது. அந்த வகையில் பாஜகவும், காங்கிரசும் சரிசமமான பலத்துடன் மோதக் கூடும் என இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதே போல் பாஜகவுக்கு ராஜஸ்தானில் 80 தொகுதிகள் முதல் 100 தொகுதிகள் வரை கிடைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதை வைத்து பார்க்கும் போது போட்டி மிகக் கடுமையாக இருக்கக் கூடும் எனத் தெரிய வருகிறது. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மல்லுக்கட்டுவது இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு முடிவின் மூலம் தெரிய வருகிறது.
காங்கிரஸ், பாஜக அல்லாமல் இதர சிலர் 9 தொகுதிகளில் இருந்து 18 தொகுதிகள் வரை வெற்றிபெறவும் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ராஜஸ்தானில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் அது நூலிழையில் பெற்ற வெற்றியாகத் தான் இருக்கும் என்பதை இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஜான்கி பாத், டிவி 9, ரிபப்ளிக், பி மார்க் உள்ளிட்ட இன்னும் பல முன்னணி நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் ராஜஸ்தானில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தானில் பாஜகவை விட காங்கிரஸ் ஐந்தாறு தொகுதிகள் கூடுதலாக வெற்றி பெறலாம் எனக் கூறி இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு முடிவு ட்விஸ்ட் வைத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications