“குட்டி யோகி”.. முஸ்லிம்கள் தலையை வெட்ட சொன்னவர் ராஜஸ்தான் முதலமைச்சரா? யார் இந்த மகந்த் பாலக்நாத்?
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில், அங்கு முதலமைச்சர் என்று கூறப்படும் மஹந்த் பாலக்நாத் யோகி சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு வெறுப்பு பேச்சுக்களை பேசி இருக்கிறார். யார் அவர்? அப்படி என்ன பேசினார்? விரிவாக பார்ப்போம்.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிகாலம் நிறைவடைவதை அடுத்து கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று இன்று முடிவுகள் எண்ணப்பட்டு வருகின்றது. இது வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ராஜஸ்தானில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது ராஜஸ்தான் முதலமைச்சராக பாஜக யாரை தேர்வு செய்யும் என்ற விவாதம் எழுந்து உள்ளது.

ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்திரா ராஜே சிந்தியா, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தியா குமாரி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் பெயர்கள் இதில் அடிபட்டன. இந்த நிலையில், பாஜக எம்பியும் சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் பிரபலமான சாமியாருமான மஹந்த் பாலக்நாத் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 40 வயதான இவர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்போல் தன்னை ராஜஸ்தானில் அடையாளப்படுத்திக்கொள்பவர்.
ராஜஸ்தானின் யோகி என்று அழைக்கப்படும் இவர் தொடர்ந்து முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டே வந்து இருக்கிறார். யோகி ஆதித்யநாத்தை பல இடங்களில் புகழ்ந்து பேசுவதை, தான் ஆட்சிக்கு வந்தால் அவரபோல் செயல்படுவேன் என்று பேசுவது என தொடர்ந்து பேசி வந்து உள்ளார். இந்த தேர்தலில் திஜாரா தொகுதியில் போட்டியிட்ட புல்டோசருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் நேற்று பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷை பாஜக தலைமையகத்தில் சந்தித்து பேசி உள்ளார்.

இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அவர் கூறி இருக்கிறார். "முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற கேள்வி இருந்தாலும், பிரதமர் மோடிதான் கட்சியின் முகமாக உள்ளார். அவர் தலைமையில் பணிபுரிவோம். யார் முதலமைச்சர் என்று கட்சி முடிவு செய்யும். நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவை செய்வதில் நான் திருப்தி அடைகிறேன்." என அவர் தெரிவித்தார். 6 வயதிலேயே சன்னியாசம் சென்ற பாலக்நாத், துறவியாக பார்க்கப்படுகிறார்.
Location: Udaipur, Rajasthan
— HindutvaWatch (@HindutvaWatchIn) September 5, 2023
Date: September 3, 2023
Mahant Balaknath Yogi, the BJP Member of Parliament from Alwar, delivered a hate speech where he threatened non-Hindus who create “disunity” with behead!ng by the sword and called Muslims “monsters”.
He was addressing a… pic.twitter.com/wR2BVywPcE
அதே நேரம் இவரது மத ரீதியிலான பேச்சுக்கள் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன. பொது மேடைகளிலேயே இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற விராத் இந்து சங்க நிகழ்வில் பேசிய அவர், முஸ்லிம்களை அரக்கர்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் தலையை வாளால் வெட்டி வீச வேண்டும் என இனப்படுகொலையை தூண்டும் வகையில் பேசினார்.
அதேபோன்று திஜாரா தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்பே உள்ள சீக்கிய புனித தளங்களான குருதுவாராக்களை அகற்றுவோம் என அவர் சாமியார் மகந்த் பாலக்நாத் பேசி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது அவர் ராஜஸ்தான் முதலமைச்சராக அறிவிக்கப்படுவார் என்று வெளியாகி இருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications