கொல்லப்படுவதற்கு முன் என்னிடம் போன் செய்து பேசினார்.. ராஜஸ்தானில் இறந்தவரின் மனைவி உருக்கம்
ராஜஸ்தானில் 'லவ் ஜிஹாத்' என்று கூறி கொலை செய்யப்பட்டவரின் மனைவி உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 'லவ் ஜிஹாத்' என்று கூறி முகமது அப்ரசுல் என்ற நபர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியது.
இதனால் இந்த சம்பவம் பெரிய பிரச்சனை ஆனது. அவர் கொடூரமாக கொலை செய்யப்படுவது அப்படியே அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது கொல்லப்பட்டவரின் மனைவி இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். தன் மொத்த குடும்பமே அவரை நம்பித்தான் இருந்தது என்று அந்த பெண் மிகவும் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.

கொடூரமான கொலை
மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது அப்ரசுல் ராஜஸ்தானில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்தார். அதே ஊரை சேர்ந்த சம்புலால் ரேகர் என்பவர் இவரை காட்டுப் பகுதி ஒன்றிற்கு வேலை விஷயமாக கூட்டி சென்றுள்ளார். அங்கு முகமது அப்ரசுலை மிகவும் கொடூரமாக கோடாளியால் தாக்கி, உயிரோடு எரித்து கொலை செய்துள்ளார். மேலும் சம்புலால் நண்பர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

காரணம் என்ன
இந்த கொலைக்கு 'லவ் ஜிஹாத்' தான் காரணம் என கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் சம்புலால் ரேகர் தங்கைக்கும் கள்ள தொடர்பு இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் காரணமாகவே ஆத்திரம் தாங்காமல் முகமது அப்ரசுல் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மனைவி பேட்டி
தற்போது இந்த சம்பவம் குறித்து முகமது அப்ரசுல் மனைவி பேட்டி அளித்துள்ளார். அதில் ''என்னுடைய கணவர் அப்போதுதான் எனக்கு போன் செய்து இருந்தார். சேமித்த 50,000 ரூபாய் பணத்தை உனக்கு அனுப்புகிறேன். அதை வைத்து கடனை அடை. இப்போது வங்கிக்கு சென்று பணம் வருகிறதா என்று சரிபார்'' என்று கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் வங்கிக்கு சென்று 2 மணி நேரம் ஆகியும் பணம் வரவில்லை. போனும் அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது. பின்புதான் அவர் கொல்லப்பட்ட சம்பவம் அவருக்கு தெரிந்துள்ளது.

வழியே இல்லை
அதேபோல் அவர் லவ் ஜிஹாத் குறித்தும் பேசியுள்ளார். அதில் ''எங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறர்ர்கள். வறுமையினால் ஒரு பெண் வேலைக்கு செல்கிறாள். அவருக்கு எல்லாம் குடும்ப வறுமையில் அப்படி ஒரு எண்ணமே வராது. சிறுக சிறுக பணம் சேர்த்து இப்போதுதான் அதை அனுப்ப நினைத்தார்.அவரை கொன்றவனுக்கு அரசு தூக்கு தண்டனை வாங்கி தரவேண்டும்'' என்று கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications