ராஜஸ்தானில் மனைவியை அரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற குடிகார கணவன்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் 40 வயது பெண் ஒருவரை அவரது கணவர் அடித்து அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள தந்தரம்காரைச் சேர்ந்தவர் கேசர் சிங்(47). விவசாயி. அவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள அவர் குடித்துவிட்டு தனது 40 வயது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிங் தனது மனைவியை அடித்து நொறுக்கி சந்தையில் அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் நடந்த இடத்தில் அவர்களின் மகளும் இருந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கேசர் சிங்கை கைது செய்தனர்.
முன்னதாக கடந்த வாரம் ராஜஸ்தானின் ராஜசமந்த் மாவட்டத்தில் உள்ள துராவட் கிராமத்தில் பெண் ஒருவர் மீது கொலைப்பழி சுமத்தி அவரை நிர்வாணமாக்கி முகத்தில் கரியை பூசி கழுதை மேல் அமர வைத்து ஊர்வலமாக கொண்டு சென்ற அவலம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications