ராஜீவ் காந்தியின் 27-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு... பிரணாப் முகர்ஜி, சோனியா, ராகுல் அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Recommended Video

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அப்போது அவர் குண்டு வைத்து கொல்லப்பட்டார். அவரது நினைவு தினம் ஆண்டுதோறும் மே 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி இன்று டெல்லியில் உள்ள வீர் பூமியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். மேலும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராஜீவ் நினைவு புகைப்படக் கண்காட்சியை திருநாவுக்கரசர் திறந்து வைத்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications