பாஜக மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தா.. 10-15 வருஷத்துல வறுமை ஒழிஞ்சிடும்! ராஜ்நாத் சிங் உறுதி
புவனேஸ்வர்: இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முழுமையாக ஒழிக்கப்படும் என்றும், இது மோடியின் கியாரண்டி பாதுகாப்புத்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், நேற்று மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது.

அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் என 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
இந்நிலையில், ஒடிசாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முழுமையாக ஒழிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பவானிபட்னா தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டிருந்த ராஜ்நாத்சிங், "நேரு தொடங்கி, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் என காங்கிரஸ் தலைவர்கள் பலர் வறுமையை ஒழிப்பதாக கூறினார்கள். ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன. இப்போது நமது பிரதமர் மோடி வறுமையை ஒழிக்கும் பணியை தொடங்கியுள்ளார்.
மோடியின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 25 கோடி போர் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். இதனை நாங்கள் சொல்லவில்லை, நிதி ஆயோக் சொல்லியிருக்கிறது. இந்த 9 ஆண்டுகளில் மோடி செய்ததை போல வேறு எந்த பிரதமரும் செய்யவில்லை. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் அனைவருக்கும் வீடு இருக்கும். வீடுகளில் குடிநீர் வசதி, எரிவாயு வசதி என அனைத்து வசதிகளும் இருக்கும்.
பசி, பட்டினி சாவு மற்றும் வறுமைக்கு பவானிப்பட்னா பெயர் பெற்றிருக்கிறது. ஆனால் பாஜக ஆட்சியில் இது அனைத்தும் காணாமல் போய்விடும். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு மக்களுக்காக 1 ரூபாய் அனுப்பினால், வெறும் 15 பைசா மட்டுமே சென்று சேர்ந்தது. ஆனால் இப்போது ஜன்தன் கணக்கு மூலம் எல்லா பணமும் மக்களுக்கு சென்று சேர்கிறது" என்று கூறியுள்ளார்.
மேலும் காலாஹண்டி லோக்சபா வேட்பாளர் மாளவிகா தேவியின் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஒடிசாவில் லோக்சபா தேர்தலோடு சேர்த்து சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. மாநிலத்தின் நீண்ட கால முதலமைச்சராக இருந்து வரும் நவீன் பட்நாயக்கை வீழ்த்த பாஜக முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications