ஏன் விமான விபத்துக்களில் விஐபிக்கள் சாவதில்லை?... ராஜ்நாத் சிங்கை அதிர வைத்த எஸ்ஐ மகள்
டெல்லி: பழைய விமானங்களைத் தூக்கிப் போடாமல் ஏன் தொடர்ந்து பயன்படுத்துகிறீர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைப் பார்த்து எல்லைப் பாதுகாப்புப் படை விமான விபத்தில் பலியான சப் இன்ஸ்பெக்டரின் மகள் கேட்டபோது அதற்குப் பதிலளிக்க முடியாமல் திணறினார் ராஜ்நாத் சிங்.
டெல்லியில் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான சப் இன்ஸ்பெக்டர் ரபீந்தர் குமாரின் மகள் அமைச்சர் ராஜ்நாத் சிங்கைப் பார்த்துக் கேட்ட கேள்விகள் அவரை உலுக்கி விட்டது.
கண்ணீர் மல்க அவர் ராஜ்நாத் சிங்கிடம் பேசுகையில், எனக்கு இதற்குப் பதில் சொல்லுங்கள். ஏன் இதுபோன்ற விபத்துக்களில் வீரர்கள் மட்டும் பலியாகிறார்கள். விஐபிக்கள் யாருமே சாவதில்லையே. ஏன் பழைய விமானங்களையே தொடர்ந்து பயன்படுத்துகிறீர்கள். இன்னும் எத்தனை உயிரைப் பலி கொடுக்கப் போகிறீர்கள் என்று சரமாரியாக அவர் கேட்டபோது ராஜ்நாத் சிங்கால் பதில் சொல்ல முடியவில்லை.
அவரைப் போலவே உறவினர்கள் பலரும் ராஜ்நாத் சிங்கைச் சூழ்ந்து கொண்டு இன்னும் எத்தனை உயிரைப் பலி கொடுக்கப் போகிறீர்கள் என்று சரமாரியாக கோபத்துடன் கேட்டனர். அவர்களை அமைச்சர் அமைதிப்படுத்தி ஆறுதல் கூறினார்.
உறவினர்களின் சோகத்தைப் பார்த்து ராஜ்நாத் சிங்குக்கும் கண்ணில் நீர் ததும்பியது. உங்களது குறைகளை அரசு நிச்சயம் பரிவுடன் பரிசீலிக்கும். நிச்சயம் தீர்வு காண்போம் என்றார் அவர்.
இந்த விபத்தில் பலியான கோ பைலட் ராஜேஷ் ஷிவ்நரைனின் மாமனார் கூறுகையில், எல்லைப் பாதுகாப்புப் படையில் உள்ள விமானங்கள் அனைத்துமே மிக மிக பழையவை என்று எனது மருமகன் கூறுவார். ஏன் இப்படி பழைய விமானங்களைத் தொடர்ந்து இந்த நாடு பயன்படுத்தி வருகிறது என்று தெரியவில்லை என்றார் கோபத்துடன்.
ஆனால் விபத்தில் சிக்கிய விமானம் பறக்கும் தகுதியுடன்தான் இருந்ததாக சப்பைக் கட்டு கட்டியுள்ளார் எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் டிகே பதக்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications