பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களே தங்களை இந்தியாவுடன் இணைக்க கோருவார்கள்: ராஜ்நாத் சிங் பேச்சு
கொல்கத்தா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று சொல்லப்படும் பகுதி நம்முடையது என்றும் அங்குள்ள மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்கள் எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கிறது. இந்த பகுதி பாகிஸ்தானின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது. ஆனால் இந்த பகுதி இந்தியாவுடன் நிச்சயம் ஒரு நாள் இணைக்கப்படும் என்று மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இதற்கு பாகிஸ்தானும் சீனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என குறிக்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் தற்போது வரை ஏற்கவில்லை.

இந்த நிலையில்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் லோக்சபா தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ராஜ்நாத் சிங், இவ்வாறு பேசியுள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது, "இந்தியாவில் அடைந்து வரும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களே நம்முடன் இருக்க வேண்டும் என்று கோருவார்கள். பாதுகாப்புத் துறையில் இந்தியா மாபெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது.
இந்தியா வளர்வதையும், நமது பொருளாதாரம் சர்வதேச அளவில் வேகமாக முன்னேறி வருவதையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நம்மை யாரும் வெல்ல முடியாத இடத்தை தற்போது அடைந்திருக்கிறோம். அதே நேரம் மற்றவர்களின் விவகாரங்களில் நாம் தலையிட மாட்டோம். ஆனால், அவர்கள் தலையிட்டால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்னும் சில நாட்களில் உலகின் முதல் மூன்று மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடிக்கும்" என்று கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026ம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் என்று கூறியிருந்தார். இப்போது ராஜ்நாத் சிங்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் எனக் கூறியுள்ளார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications