For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல்: வென்றார் பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ்

Google Oneindia Tamil News

Recommended Video

    ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் - ஹரிபிரசாத் மோதல்..வீடியோ

    டெல்லி: ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றார்.

    தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. இன்று முற்பகல் 11 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

    Rajya Sabha dy. chairman poll: It is Harivansh vs Hariprasad

    இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சி சார்பில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹர்வன்ஷ் நாராயண் சிங் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்தன. எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் எம்.பி. ஹரிபிரசாத்துக்கு 105 வாக்குகளே கிடைத்தன. இதனால் நாராயண் சிங் வெற்றி பெற்றார்.

    முன்னதாக தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியின் அனந்த் சர்மா கூறுகையில், மோடி சர்க்காருக்கான எதிரான வாய்ப்பாக இதைப் பார்க்கிறோம். எனவே ஒரு மனதான தேர்வாக இருக்கக் கூடாது அனைத்துக் கட்சிகளும் விரும்பின. எனவேதான் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தோம். நாட்டின் தற்போதைய நிலை சரியில்லை. எனவே இந்த போட்டி அவசியமானது என்று கூறியிருந்தார்.

    சமீபத்தில்தான் லோக்சபாவில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்றைய மோதல் சுவாரஸ்யமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இதிலும் முடிவு பாஜகவுக்கு சாதகமாகவே போயுள்ளது.

    English summary
    The numbers appear to be tilted clearly in favour of the NDA in the elections to the post of Rajya Sabha deputy chairman. However the Congress has refused to leave the arena and fielded B K Hariprasad for the post, who will be taking on the NDA's Harivansh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X