நாளை நடைபெறுகிறது ராஜ்யசபா எம்.பி. தேர்தல்.. பலத்தை அதிகரிக்க பாஜக மும்முரம்
டெல்லி: காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.
உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 16 மாநிலங்களில் 58 ராஜ்யசபா உறுப்பினர் பதவியிடங்கள் காலியாகியுள்ளன. ராஜ்யசபா உறுப்பினர்களை சட்டசபை உறுப்பினர்கள், வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள்.

நாளை, காலை 9 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடையும். ரிசல்ட் மாலையிலேயே அறிவிக்கப்படும். எம்.பி பதவியிடங்கள் காலியாக உள்ள 16 மாநிலங்களில் 11ல் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, ராஜ்யசபாவில் அக்கட்சிக்கு கூடுதல் இடம் கிடைக்கப்போகிறது.
இப்போது 245 பேர் கொண்ட ராஜ்யசபாவில் பாஜகவுக்கு 58 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரசை விட நான்கு எம்.பி.க்கள் மட்டுமே பாஜகவுக்கு அதிகமாக உள்ளனர். தனி மெஜாரிட்டிக்கு 126 எம்.பி.க்கள் தேவை. ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் 6 வருடங்கள். எனவே இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்கள் ஓய்வு பெறுகிறார்கள்.
| மாநிலம் | மொத்த சீட்டுகள் | போட்டியின்றி தேர்வு (மார்ச் 15ல்) | மார்ச் 23ல் தேர்தல் நடைபெறப்போவது | |
|---|---|---|---|---|
| 1 | ஆந்திரா | 3 | 6 | |
| 2 | பீகார் | 6 | 3 | |
| 3 | சட்டீஸ்கர் | 1 | 1 | |
| 4 | குஜராத் | 4 | 4 | |
| 5 | ஹரியானா | 1 | 1 | |
| 6 | ஹிமாச்சல் | 1 | 1 | |
| 7 | கர்நாடகா | 4 | 4 | |
| 8 | மத்திய பிரதேசம் | 5 | 5 | |
| 9 | மகாராஷ்டிரா | 6 | 6 | |
| 10 | தெலுங்கானா | 3 | 3 | |
| 11 | உத்தரபிரதேசம் | 10 | 10 | |
| 12 | உத்தரகாண்ட் | 1 | 1 | |
| 13 | மேற்கு வங்கம் | 5 | 5 | |
| 14 | ஒடிசா | 3 | 3 | 0 |
| 15 | ராஜஸ்தான் | 3 | 3 | 0 |
| 16 | ஜார்கண்ட் | 2 | 2 | |
| மொத்தம் | 58 | 33 | 25 |
உத்தரபிரதேசத்தில் 10, மகாராஷ்டிரா, பீகாரில் தலா 6, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 5, குஜராத், கர்நாடகாவில் தலா 4, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஒடிசாவில் தலா 3, சட்டீஸ்கர், ஹரியானா, உத்தரகாண்ட் , ஹிமாச்சல பிரதேசம் தலா 1 பதவியிடங்கள் காலியாக உள்ளன.
எனவே, 58 பேரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில், 10 மாநிலங்களில் 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். நாளை அது முறைப்படி அறிவிக்கப்படும். எஞ்சிய 25 பதவிகளுக்குத்தான், 6 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அவை, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா.
| கட்சி | போட்டியின்றி தேர்வு |
|---|---|
| பாஜக | 16 |
| காங்கிரஸ் | 5 |
| பிஜுஜனதாதளம் | 3 |
| தெலுங்கு தேசம் | 2 |
| ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் | 1 |
| ஐக்கிய ஜனதாதளம் | 2 |
| ராஷ்டிரிய ஜனதாதளம் | 2 |
| சிவசேனா | 1 |
| தேசியவாத காங்கிரஸ் | 1 |
உத்தரபிரதேசத்தில் இருந்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி போட்டியிடுகிறார். ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ராஜ்யசபா தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications