ராம் ரஹீம் சிங் பல பெண்களை சீரழித்துள்ளார்: பாதிக்கப்பட்ட பெண் பரபர பேட்டி
சன்டிகர்: சாமியார் ராம் ரஹீம் சிங் பல பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2 பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் துணிச்சலாக பேட்டி அளித்துள்ளார்.
அந்த பெண் கூறியிருப்பதாவது,

தேரா
எங்கள் குடும்பத்திற்கும் தேராவுக்கும் 40 ஆண்டு பழக்கம். நான் தேரா நடத்தும் பள்ளியில் ஆசிரியையாக இருந்தேன். ராம் ரஹீம் சிங் அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார்.

பலாத்காரம்
ராம் ரஹீம் சிங் இருந்த குகையை பாதுகாக்க பெண்களை வெளியே நிறுத்துவார். நானும் அந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறேன். அவர் என்னையும் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து என் பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் ராம் ரஹீம் சிங்கிற்கு பயந்து என்னை எங்கள் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்துவிட்டனர். பின்னர் 2001ம் ஆண்டு என் மொத்த குடும்பமும் தேராவில் இருந்து வெளியேறியது.

மிரட்டல்
பாலியல் பலாத்காரம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று ராம் ரஹீமின் ஆட்கள் எங்களை மிரட்டி வந்தனர். சமூகத்தின் பெயர் கெட்டுவிடும் என்று பாதிக்கப்பட்ட பிற பெண்கள் யாரும் வாய் திறக்கவில்லை.

சகோதரர்
ராம் ரஹீம் சிங் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது குறித்து பிரதமர் மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு யாரோ கடிதம் அனுப்பினர். அது என் சகோதரர் என்று சந்தேகப்பட்டு 2002ம் ஆண்டு ராம் ரஹீம் சிங்கின் அடியாட்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டனர் என்றார் அந்த பெண். அந்த கடிதத்தால் தான் ராம் ரஹீம் சிங் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications