பெரிய மாநிலமான உ.பியில் பலாத்காரம் இயல்பானதுதான்: சமாஜ்வாடி தலைவர் பேச்சால் புது சர்ச்சை
லக்னோ: உத்தரபிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் நடப்பது இயல்பானதுதான் என்று ஆளும் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மோசின் கான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமாஜ்வாடி தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களால் நொந்துபோயுள்ள உ.பி மக்கள் இவரது பேச்சால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் சகோதரிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில், வாயில் ஆசிட் ஊற்றி பெண் கொல்லப்பட்டார். உச்சகட்டமாக, பெண் நீதிபதியே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
உ.பி.யில் பெண்களுக்கு எதிராக தினம் ஒரு மோசமான சம்பவங்கள் நடப்பதால் பாஜக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. உ.பியில் குடியரசு தலைவர் ஆட்சி வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கைவிடுத்து வருகிறது.
ஆனால் ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவோ, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஆண் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள் என்று கூறியிருந்தார். மாநில முதல்வர் அகிலேஷ் யாதவோ, எல்லா மாநிலத்திலும் இப்படித்தான் நடக்கிறது என்று கூறியிருந்தார்.
சமாஜ்வாடி கட்சியினரின் இந்த பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று அக்கட்சியின் மூத்த தலைவர் மோசின்கான் கூறுகையில், "காதலர்கள் தங்களுக்குள் உடல் ரீதியாக நெருக்கம் வைத்துக் கொண்டு பிரச்சினை என்று வரும்போது பாலியல் பலாத்காரம் என்று அதை புகாராக அளிக்கிறார்கள்.
இதையெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு உதாரணமாக எடுக்க கூடாது. உத்தரபிரதேசம் மிகப்பெரிய மாநிலம். எனவே பலாத்காரம் ஆங்காங்கு நடந்துகொண்டுதான் இருக்கும். இதில் அரசை குறை கூறவழியில்லை. மீடியாக்கள் நாட்டின் பிற பகுதியில் நடக்கும் சம்பவங்களை மறைத்துவிட்டு உத்தரபிரதேசத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றன என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications