ஆதார் கார்டு + ரேஷன் கார்டு இணைக்க சொன்னது இதுக்குதான்..குடும்ப அட்டைதாரர்களே, அரசின் அதிரடி பாருங்க

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டினை மத்திய அரசு இணைக்க சொல்லியிருந்த நிலையில், பொதுமக்களும் அதன்படியே இணைத்திருந்தனர். அப்படி இணைத்தால்தான், சிலரது முறைகேடுகள் தற்போது வெளிவர துவங்கி உள்ளன.

ஆதார் கார்டும்சரி, ரேஷன் கார்டும்சரி, வெறும் ஆவணங்கள் மட்டுமல்ல.. அது தனிமனித நபரின் அடையாளமும்கூட.. அரசு வழங்கும் மக்கள் நலத்திட்டங்களில் உதவிகளை பெறுவதற்கு ஆதார் கார்டும் அவசியம்...
பான்கார்டுகள்: சிம் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதாரை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில், ரேஷன் கார்டிலும் ஆதாரை இணைத்தாக வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

Ration card aadhar card link and 9500 ration card ban in Uttar pradesh and Bihar

இதற்கு காரணம், ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆதார் கார்டு: அதனால்தான், ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.. இதற்கான காலக்கெடு பலமுறை அரசு வழங்கியிருந்த நிலையில், பொதுமக்களும், ரேஷன் கார்டு + ஆதார் கார்டினை இணைத்திருந்தனர்.

இப்படி இணைக்கப்பட்ட பிறகுதான், இப்படி ஒரு மோசடியே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. நிறைய பேர், வேறொரு மாநிலத்தின் வசிப்பிட சான்றிதழை தானாகவே உருவாக்கி ரேஷன் கார்டு மூலமாக பொருட்கள் வாங்கிவந்திருக்கிறார்களாம். இப்படி மொத்தம் 9500 பேர் சிக்கி உள்ளனர்.. அவர்களின் ரேஷன் கார்டுகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகள் ரத்து: உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் அருகே உள்ள பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டம் பகஹாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 9500 பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறதாம்.. இவர்கள் எல்லாருமே பீகார் மாநிலம் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள நுகர்வோர் பட்டியலில் தங்கள் பெயர்களை பதிவு செய்தவர்கள்..
அத்துடன், ரொம்ப வருடங்களாகவே, ரேஷனை பயன்படுத்தி கொண்டிருந்தவர்களும்கூட... இருப்பிட சான்றிதழ்களை தயார் செய்து, அதை வைத்து, ரேஷன் கார்டுகளை வாங்கியிருக்கிறார்கள்.. ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் இணைக்கும் பணியை அரசு தற்போது, தொடங்கியபோதுதான், இந்த மோசடி தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, அவர்களது ரேஷன் கார்டுகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த லிஸ்ட்டையும் வெளியிட்டுள்ளது.

Ration card aadhar card link and 9500 ration card ban in Uttar pradesh and Bihar

லிஸ்ட் வெளியீடு: பகாஹா-1ல் 1012 பேருக்கும், பகாஹா-IIல் 1509 பேருக்கும், மதுபானியில் 2644 பேருக்கும், பிதாவில் 2750 பேருக்கும், ராம்நகரில் 392 பேருக்கும், பிப்ராசியில் 1313 பேருக்கும், தக்ராஹானில் 5561 பேருக்கும் ரேஷன் கார்டுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ரேஷன் கார்டுடன் ஆதார் இணைப்பு இல்லை. தற்போது ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உத்தரபிரதேசம், பீகாரையடுத்து, இந்தியா முழுவதும் உள்ள பயனர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறதாம்.. எனவே, இன்னும் அதிகப்படியான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+